60 வினாடில வரலைன்னா 5 ரன்ஸ் பெனால்டி.. ஒய்ட் பால் கிரிக்கெட்டில் ஐசிசி அறிவித்த 3 புதிய விதிமுறை

ICC Rules
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அடிப்படை விதிமுறைகளில் ஐசிசி அவ்வப்போது தேவையான மாற்றங்களை செய்வது வழக்கமாகும். அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் போட்டி முடிய வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பந்து வீசும் அணிகளுக்கு சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சில தொகையை அபராதமாக ஐசிசி விதித்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி அனைத்து அணிகளும் தொடர்ந்து மெதுவாக பந்து வீசுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.

இந்நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக ஐசிசி புதிதாக ஒரு விதிமுறையை கொண்டு வரவுள்ளது. அதாவது ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியின் பவுலர் ஒரு ஓவரை வீசி முடித்த பின் அதற்கடுத்த பவுலர் அடுத்த ஓவரை வீசுவதற்கு 60 நொடிக்குள் வர வேண்டும். அதை மீறும் பட்சத்தில் களத்தில் இருக்கும் நடுவர்கள் அதிகாரப்பூர்வமாக 2 முறை எச்சரிக்கை விடுப்பார்கள்.

- Advertisement -

ஐசிசி விதிமுறை:
அதையும் தாண்டி 3வது முறையாக பவுலர் 60 வினாடிகளை கடந்து பந்து வீசுவதற்காக வரும் பட்சத்தில் அதற்கு தண்டனையாக அந்த அணிக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும். இந்த 60 நொடிகளை கண்காணிப்பதற்காக களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு ஸ்டாப் வாட்ச் எனப்படும் கடிகாரம் கொடுக்கப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த விதிமுறை வெள்ளோட்டமாக வரும் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கொண்டு வரப்பட உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அது வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் வருங்காலங்களில் டெஸ்ட் உட்பட அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்த விதிமுறை நிரந்தரமாக்கப்படும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

இது போக மைதானங்களில் இருக்கப்படும் பிட்ச் மற்றும் வெளிப்புற களங்களில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அந்த மைதானத்திற்கு 5 – 6 புள்ளிகள் வழங்கப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக போட்டி சமநிலையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த விதிமுறை கொண்டு வருவதாக ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் 2024 ஜனவரி முதல் ஆடவர் மற்றும் மகளிர் நடுவர்களுக்கு சமமான ஊதியம் வழங்குவதற்கும் ஐசிசி முடிவு எடுத்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த டார்கெட் 2024 டி20 உ.கோ.. தனது உத்தேச இந்திய அணியை தேர்வு செய்த ஸ்ரீசாந்த்

மேலும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் தொடரை நடத்தும் நாட்டுக்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து பொதுவான நடுவர்கள் மட்டுமே களத்தில் தீர்ப்புகளை வழங்குவார்கள் என்றும் ஐசிசி கூறியுள்ளது. இதற்கு ஐசிசி தலைமை நிர்வாக இயக்குனர் ஒப்புதல் வழங்கியுள்ளதால் இந்த விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement