- Advertisement -
ஆசிய கோப்பை

பொய் பேசும் ஊடங்கள்.. இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. கோப்பை வேணும்னா அங்க வாங்க.. நக்வி ட்வீட்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது சாம்பியன் பட்டம் வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இருப்பினும் அவருடைய கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது.

அதனால் வெறுப்பான அவர் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக அங்கிருந்து கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நக்வி வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையைக் கொடுப்பார் என்று 45 நிமிடங்கள் மைதானத்திலேயே காத்திருந்தனர். இறுதியில் இந்தியா வாங்க மறுத்ததால் கோப்பை வழங்கப்படவில்லை என்று ஆசியக் கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

மன்னிப்பு கேட்க மாட்டேன்:

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நவம்பர் மாதம் நக்வி மேலே ஐசிசிடம் புகார் செய்ய உள்ளதாக கூறினார். அத்துடன் விரைவில் ஆசியக் கோப்பை மற்றும் மெடல்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே தம்முடைய செயலுக்காக பிசிசிஐ அதிகாரிகளிடம் மோசின் நக்வி மன்னிப்பு கேட்டதாக இன்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதே சமயம் துபாயில் இருக்கும் ஆசிய கவுன்சில் அலுவலகத்தில் சூரியகுமார் கோப்பையை வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் கூறின. மற்ற படி இந்தியா கேட்கும் வழியில் கோப்பையை தர முடியாது என்று அவர் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிடம் தாம் மன்னிப்பு கேட்கவில்லை கேட்கவும் மாட்டேன் என்று நக்வி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வேணும்னா வாங்க:

வேண்டுமானால் இந்தியா கோப்பையை தன்னிடம் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய ஊடகங்கள் பொய்களில் வளர்கின்றன உண்மைகளால் அல்ல. நான் அதை முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. பிசிசிஐயிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. அவ்வாறு ஒருபோதும் செய்யவும் மாட்டேன். இது இடுக்கப்பட்ட முட்டாள்தனம் மற்றும் மலிவான பிரச்சாரமேயின்றி வேறில்லை”

இதையும் படிங்க: முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கே.எல் ராகுல் இந்த விடயத்தில் அசத்துராரு – வருண் ஆரோன் பேட்டி

“இது அவர்களின் சொந்த மக்களை தவறாக வழி நடத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டது. துரதிஷ்டவசமாக இந்தியா கிரிக்கெட்டில் தொடர்ந்து அரசியலை இழுத்து விளையாட்டு உணர்வை சேதமடைய வைக்கிறது. ஆசிய கவுன்சில் தலைவராக நான் அன்றைய நாளே கோப்பையை கொடுக்கத் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன். இந்தியா உண்மையிலேயே கோப்பையை வாங்க விரும்பினால் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்

- Advertisement -