80/5 என சரிந்தாலும் கடைசி 9 ஓவரில் 109 ரன்கள்.. தென்னாப்ரிக்காவை நொறுக்கி நெதர்லாந்து அணி செய்த சம்பவம்

- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 17ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் அழகான தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய அந்த போட்டி மழையால் தாமதமானதை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங் 18, மேக்ஸ் ஓ’தாவுத் 18 என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் அடுத்ததாக வந்த ஆகர்மேன் 12, பஸ் டீ லீடி 2, எங்கேல்பேர்ச்ட் 19 என முக்கிய வீரர்களும் தென்னாப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

அசத்திய நெதர்லாந்து:
அதனால் 80/5 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணி 150 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் அவருடன் கைகொடுக்க முயற்சித்த நிதமனரு 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த வேன் பீக்குடன் ஜோடி சேர்ந்த எட்வர்ட்ஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய 50 ரன்கள் கடந்து நெதர்லாந்தை காப்பாற்றப் போராடினார்.

இருப்பினும் அப்போது பீக் 10 (27) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் வேன் டெர் மெர்வி அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஆர்யான் தத் தம்முடைய பங்கிற்கு வெறும் 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசி 23* ரன்களை நொறுக்கி தென்னாபிரிக்காவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அவருடன் மறுபுறம் தொடர்ந்து கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ரன்கள் எடுத்ததால் கடைசி வரை ஆல் அவுட்டாகாத நெதர்லாந்து 43 ஓவரில் 245/8 ரன்கள் எடுத்து அட்டகாசம் செய்தது. குறிப்பாக கத்துக்குட்டியாக கருதப்படும் அந்த அணி கடைசி 9 ஓவர்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா பவுலர்களை அடித்து நொறுக்கி 109 ரன்கள் சேர்த்து தரம்சாலா மைதானத்தில் சம்பவம் செய்தது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக 140/7 என இருந்த அந்த அணி 43 ஓவரில் 245/8 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க: 80/5 என சரிந்தாலும் கடைசி 9 ஓவரில்.. தென்னாப்ரிக்காவை நொறுக்கி நெதர்லாந்து அணி செய்த சம்பவம்

அப்படி டெத் ஓவர்களில் அந்த அணியிடம் அடி வாங்கிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, மார்க்கோ யான்சன் மற்றும் லுங்கி நெகிடி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த நெதர்லாந்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அதே போல இப்போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு நெதர்லாந்து போராடி வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement