8 சிக்ஸ்.. 441.67 ஸ்ட்ரைக் ரேட்.. காட்டடியால் யுவ்ராஜ் சிங்கின் ஆல் டைம் சாதனையை தூளாக்கிய இந்திய வீரர்

Ashutosh Sharma
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பையின் 2023 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 17ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 31வது லீக் போட்டியில் ரயில்வேஸ் மற்றும் அருணாச்சல பிரதேஷ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ரயில்வே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அதிரடியாக 246/5 ரன்கள் குவித்து மிரட்டியது.

அந்த அணிக்கு சிவம் சவுத்ரி 11, ப்ரதம் சிங் 24, விவேக் சிங் 18 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் 4வது இடத்தில் களமிறங்கிய உபேந்திரா யாதவ் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சௌபே 24 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய உபேந்திரா 50 ரன்கள் கடந்து அசத்தினார்.

- Advertisement -

யுவியின் சாதனை உடைப்பு:
அந்த நிலையில் 16வது ஓவரில் அவருடன் ஜோடி சேர்ந்த அஷுடோஷ் சர்மா களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பவுலர்களை பந்தாடி சிக்ஸர்களாக பறக்க விட்டார். அதே வேகத்தில் பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் வெறும் 11 பந்துகளில் 50 ரன்கள் கடந்து டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து மாபெரும் சாதனை படைத்தார்.

இதற்கு முன் 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதமடித்தார் என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும் அந்த சாதனையுடன் ஒப்பிட முடியாது என்றாலும் தம்முடைய தரத்திற்கு அசத்திய அஷுடோஷ் சர்மா மொத்தம் 1 பவுண்டரி 8 சிக்சருடன் 53 (12) ரன்களை 441.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வாங்கி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் தொடர்ந்து அசத்திய உபேந்திரா யாதவ் 6 பவுண்டரி 9 சிக்சருடன் சதமடித்து 103* (51) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார்.

- Advertisement -

இதையும் படிங்க: அந்த திறமையில்லாம கம்பேக் கொடுப்பது கஷ்டம்.. எங்க காலத்துல இருந்த பாகிஸ்தானே வேற.. கங்குலி பேட்டி

அந்தளவுக்கு சுமாராக பந்து வீசிய அருணாச்சலப் பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக அபாரமேயே ஜெயஸ்வால் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 247 என்ற கடினமான இலக்கை துரத்திய அருணாச்சலப் பிரதேசம் பவுலிங் போலவே பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டு 18.1 ஓவரில் 119 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆயுஸ் அவஸ்தி 36 ரன்கள் எடுக்க ரயில்வே சார்பில் அதிகபட்சமாக சுசில் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் ரயில்வேஸ் மிகவும் எளிதாக 127 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement