அந்த திறமையில்லாம கம்பேக் கொடுப்பது கஷ்டம்.. எங்க காலத்துல இருந்த பாகிஸ்தானே வேற.. கங்குலி பேட்டி

Sourav Ganguly
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. அதனால் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய கௌரவத்தையும் வெற்றி சரித்திரத்தையும் தக்க வைத்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

மறுபுறம் பாபர் அசாம் உள்ளிட்ட தரமான வீரர்கள் இருந்தும் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 155/2 என்ற நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் அதன் பின் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீட்டுக்கட்டு போல சரிந்த பாகிஸ்தான் 191 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

கம்பேக் கஷ்டம்:
அதே போல பந்து வீச்சிலும் சுமாராக செயல்பட்ட அந்த அணியை கேப்டன் ரோகித் சர்மா அடித்து நொறுக்கி இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். அதனால் காலம் காலமாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் வெற்றிக்காக முழு மூச்சுடன் போராடியிருந்திருக்கலாம் என்று பாகிஸ்தான் மீது ரமீஷ் ராஜா உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தங்களுடைய காலத்தில் இருந்த பாகிஸ்தான் அணி மிகவும் ஆக்ரோசமாக அதிரடியாக விளையாடியதாக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தை தைரியமாக கையாளும் திறமையை கொண்டிருக்கவில்லை என்றும் கங்குலி கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இந்த பேட்டிங்கை வைத்துக்கொண்டு பாகிஸ்தானால் 2023 உலகக் கோப்பையில் கம்பேக் கொடுப்பது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுடைய காலத்தில் இருந்த பாகிஸ்தான் அணி முற்றிலும் வித்தியாசமானது. நாங்கள் விளையாடிய பாகிஸ்தான் அணி இதுவல்ல. குறிப்பாக பேட்டிங்கின் போது தற்போதைய அணியால் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. எனவே இந்த பேட்டிங்கை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் உலகக்கோப்பையில் மீண்டும் வருவது கடினமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தவறை ஒப்புக்கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர்.. 2 தண்டனைகளை அறிவித்த ஐசிசி.. நடந்தது என்ன?

மேலும் அப்போட்டியில் பாகிஸ்தானை நொறுக்கிய ரோகித் சர்மாவை பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பராக விளையாடினார். இந்தியா தற்போது அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அப்போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் ஒரே நேரத்தில் இந்தியா சரியான நேரத்தில் நெருப்பாக செயல்பட்டது” என்று கூறினார்.

Advertisement