ஆஸியிடம் அடி வாங்குனாலும் கம்பேக் பண்ணிட்டோம்.. எங்களோட லட்சியமே வேற.. நெதர்லாந்து கேப்டன் உற்சாக பேட்டி

Scott Edwards
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற 28வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 50 ஓவர்களில் கடுமையாக போராடி 229 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன்ஸ் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68, பரேசி 41 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான், மெகிதி ஹாசன், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 230 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்பம் முதலே நெதர்லாந்தின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 42.2 ஓவரில் வெறும் 142 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

சிறப்பான கம்பேக்:
அந்த அணிக்கு லிட்டன் தாஸ், கேப்டன் சாகிப் அல் ஹசன் போன்ற முக்கிய விரல்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் மீக்ரன் 4 விக்கெட்களை சாய்த்தார். அதனால் ஏற்கனவே தென்னாபிரிக்காவை தோற்கடித்த நெதர்லாந்து இதையும் சேர்த்து வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பையில் முதல் முறையாக 2 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 309 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கோப்பையை வெல்வது கடினம் என்றாலும் செமி ஃபைனல் வரை செல்வதே தங்களுடைய லட்சியம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதாகவே இருந்தது”

- Advertisement -

“அதிலிருந்து 2 நாட்கள் ஓய்வுக்குப்பின் உடனடியாக இங்கு பயணித்த நாங்கள் என்னுடைய திட்டங்களில் ஈடுபட்டோம். இப்போட்டியில் 220 ரன்கள் அடித்தால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிகமாக கை கொடுத்தனர். ஆர்யன், கோலின், பஸ் உள்ளிட்ட பவுலர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். அத்துடன் நாங்கள் ஃபீல்டிங்கில் சூப்பராக செயல்பட்டோம்”

இதையும் படிங்க: நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் நாங்க தோக்க இதுவே காரணம் – தொடர் தோல்விக்கு பின் ஷாகிப் அல் ஹசன் வருத்தம்

“இப்போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் அசத்தினோம். தற்போது நெதர்லாந்தில் கிரிக்கெட்டின் சிஸ்டங்கள் முன்னேற துவங்கியுள்ளது. வெற்றிக்காக நாங்கள் கடினமாக பயிற்சி எடுக்க துவங்கியுள்ளோம். இத்தொடரின் துவக்கத்திலேயே நாங்கள் ஃசெமி பைனலுக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது. ஆனால் அடுத்ததாக எங்களுக்கு சில கடினமான போட்டிகள் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement