PAK vs NED : கைல இருந்த மேட்ச்.. அவருக்கு சப்போர்ட் பண்ணிருந்தா பாகிஸ்தானை தோற்கடிச்சுருப்போம்.. கேப்டன் எட்வர்ட்ஸ் வருத்தம்

Netherlads Scott Edwards
- Advertisement -

இந்தியாவில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியுள்ள ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் நெதர்லாந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷாக்கீல் ஆகியோர் தலா 68 ரன்கள் எடுக்க நெதர்லாந்து அந்த சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 287 ரன்களை துரத்திய நெதர்லாந்துக்கு துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 52 ரன்கள் அடித்து போராட்டத்தை துவக்கினார். அவரைப் போலவே மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரர் பஸ் டீ லீடி அதிரடியாக விளையாடி 67 (68) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கைல இருந்த மேட்ச்:
அப்படி 2 பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 133/3 என்ற நல்ல நிலையில் இருந்த நெதர்லாந்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களை தவிர்த்து மேக்ஸ் ஓ’தாவுத் 5, ஆக்கர்மேன் 17, நிடமனரு 5, கேப்டன் எட்வர்ட்ஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 41 ஓவரில் நெதர்லாந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் 120 ரன்கள் எடுத்திருந்த வரை போட்டி தங்களது கையில் இருந்ததாக தெரிவிக்கும் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங்கில் 67 ரன்கள் குவித்து பவுலிங்கில் 4 விக்கெட்களை எடுத்த லீடிக்கு எஞ்சிய வீரர்களில் யாராவது ஒருவர் ஆதரவு கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை செய்ய தவறியதால் கிடைத்த தோல்வியால் வருத்தமடைந்த அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் இந்த தோல்வி சற்று ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஏனெனில் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். இருப்பினும் கடைசி நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ததற்காக பாகிஸ்தானுக்கு பாராட்டுக்கள். நாங்கள் 120 ரன்கள் எடுத்த போது போட்டி எங்கள் கையில் இருப்பதாக உணர்ந்தோம். குறிப்பாக பஸ் டீ லீடி 3 துறைகளிலும் அபாரமாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: PAK vs NED : போராடிய நெதர்லாந்து.. இந்திய மண்ணில் 27 வருடத்தில் முதல் முறையாக பாகிஸ்தான் சாதனை வெற்றி

“ஆனால் வெற்றிக்கு அவருடன் யாராவது ஒருவர் துணையாக சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அதை செய்திருந்தால் நாங்கள் இன்னும் நல்ல நிலைமையில் இருந்திருக்கலாம். இருப்பினும் பாகிஸ்தான் அணி மிடில் ஆர்டரில் சில முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்” என்று கூறினார். இருப்பினும் பாகிஸ்தனை ஆல் அவுட்டாக்கிய நெதர்லாந்து முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

Advertisement