PAK vs NED : போராடிய நெதர்லாந்து.. இந்திய மண்ணில் 27 வருடத்தில் முதல் முறையாக பாகிஸ்தான் சாதனை வெற்றி

PAk vs NED 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தான் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சற்று தடுமாற்றமான பேட்டிங்கையே வெளிப்படுத்தியது.

குறிப்பாக பகார் ஜமான் 12, இமாம்-உல்-ஹக் 15, கேப்டன் பாபர் அசாம் 5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர் அதனால் 38/3 என தடுமாறிய அந்த அணிக்கு 4வது விக்கட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய சௌத் ஷாக்கீல் 68 (52) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் 68 (75) ரன்களும் எடுத்து சரிவை சரி செய்தார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:
இருப்பினும் இப்திகார் அகமது 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் முகமது நவாஸ் 39, சடாப் கான் 32, ஷாஹீன் அப்ரிடி 13*, ஹரிஷ் ரவூப் 16 ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்கள் தாக்குப்பிடிக்காத பாகிஸ்தான் 49 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி 4 விக்கெட்டுகளையும் ஆக்கர்மேன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து 287 என்ற இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு மேக்ஸ் ஓ’தாவுத் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஆக்கர்மேன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சவாலை கொடுத்து முடிந்தளவுக்கு போராடி 52 (67) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது 133/3 என்ற நல்ல நிலையில் இருந்த நெதர்லாந்துக்கு பஸ் டீ லீடி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

- Advertisement -

ஆனால் நிடமனுரு 5, கேப்டன் எட்வர்ட்ஸ் 0 என 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஹாரிஸ் ரவூப் வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். அதனால் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய டீ லீடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 67 (68) ரன்களில் அவுட்டானதுடன் நெதர்லாந்தின் வெற்றி கனவும் முடிந்தது. ஏனெனில் கடைசி நேரத்தில் வேன் பீக் 28 (29) ரன்கள் எடுத்துப் போராடியும் 41 ஓவரில் 205 ரன்களுக்கு நெதர்லாந்தை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்ற பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்களையும் ஹசன் அலி 2 விக்கெட்களையும் விக்கெட்களை சாய்த்தனர்.

இதையும் படிங்க: ENG vs NZ : அது எப்படிங்க 152 ரன்னை அடிச்சவரை விட்டுட்டு 123 ரன் அடிச்சவருக்கு – ஆட்டநாயகன் விருது குடுத்தாங்க?

அந்த வகையில் பந்து வீச்சில் சிறப்பாக போராடிய நெதர்லாந்து பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் 27 வருடங்களில் இந்திய மண்ணில் முதல் முறையாக பாகிஸ்தான் ஒரு வெற்றி பெற்றது. இதற்கு முன் 1996, 2011 தொடர்களில் உலக கோப்பைகளில் இந்திய மண்ணில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியே சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement