NZ vs NED : கடைசி 3 ஓவரில் எல்லாம் போச்சு.. நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின் நெதர்லாந்து கேப்டன் வருத்தம்

Scott Edwards.jpeg
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பையில் அக்டோபர் 9ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. மதியம் 2 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டு 50 ஓவரில் 322/7 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவோன் கான்வே 32, வில் எங் 70, ரச்சின் ரவீந்தரா 51, டார்ல் மிட்சேல் 48 ரன்கள் எடுத்தனர். ஆனால் கிளன் பிலிப்ஸ் 4, மார்க் சேப்மேன் 5 ரன்களில் அவுட்டானதால் 44.1 ஓவரில் 254/6 என தடுமாறிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லாதமும் 53 ரன்களில் அவுட்டானார். அப்போது 293/7 என தடுமாறிய நியூசிலாந்து 300 ரன்கள் தாண்டாத என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் மிட்சேல் சான்ட்னர் அதிரடியாக 36* (17) ரன்களும் மாட் ஹென்றி 10* (4) ரன்களும் எடுத்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார்கள்.

- Advertisement -

கடைசி 3 ஓவரில்:
நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஆர்யான் தத், வேன் டெர் மெர்வி, வேன் மீக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 323 என்ற இலக்கை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து ஓவரில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங் 12, மேக்ஸ் ஓ’தாவுத் 16, பஸ் டீ லீடி 18, கேப்டன் எட்வட்ர்ஸ் 30 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கோலின் ஆக்கர்மேன் 69 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் 40 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்ட தாங்கள் நியூசிலாந்தை 280 – 300 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார். இருப்பினும் கடைசி 3 ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கியதால் தோல்வி கிடைத்ததாக வருத்தத்தை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் முதல் 40 ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ஆனால் கடைசி 3 ஓவரில் அவர்கள் நாங்கள் வெற்றிக்காக நம்பிய ஸ்கோரை விட அதிகமாக எடுத்தனர். குறிப்பாக இன்றைய பிட்ச் பேட்டிங்க்கு நன்றாக இருப்பதால் அவர்களை 280 – 300 ரன்களை கட்டுப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் நியூசிலாந்து பவுலிங் அட்டாக் நேர்த்தியாக இருந்தது”

இதையும் படிங்க: NZ vs NED : மாபெரும் சரித்திரம் படைத்த சான்ட்னர்.. நெதர்லாந்தை சுருட்டிய நியூஸிலாந்து.. டேபிள் டாப்பராக மிரட்டல்

“அவர்கள் எளிதான ரன்களை கொடுக்கவில்லை. அதனால் 321 ரன்களை 30, 40, 50 போன்ற ரன்கள் அடித்து உங்களால் எட்ட முடியாது. எனவே அடுத்து வரும் போட்டிகளில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ரன்கள் குவிப்பது பற்றி எங்கள் வீரர்களிடம் பேசுவோம். அடுத்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி காண முயற்சிப்போம்” என்று கூறினார்.

Advertisement