அவர எங்களால நிறுத்தவே முடில.. அதை கொஞ்சம் மிஸ் பண்ணிட்டோம்.. படுதோல்விக்கு பின் நெதர்லாந்து கேப்டன் பேட்டி

Scott Edwards 3
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் நெதர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அபாரமாக விளையாடி 399/8 ரன்கள் அடித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 106 (44) டேவிட் வார்னர் 104 (93) ரன்களும் அதிரடியாக எடுத்த நிலையில் நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக லோகன் வேன் பீக் 4 விக்கெட்களை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 400 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் தெறிக்க விடும் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 21 ஓவரில் 90 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஒன்னும் பண்ண முடியல:
அந்த அணிக்கு அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை வீழ்த்தனார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது போல் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நெதர்லாந்து படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியில் பந்து வீச்சில் கொஞ்சம் லைனை தவறாக வீசிய தங்களது பவுலர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு வெளியே அடித்து நொறுக்கியதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார். குறிப்பாக மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு விளையாடியதாக பாராட்டும் அவர் இந்த தோல்வியில் பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா தரமான அணி. நாங்கள் இன்று சற்று சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பந்து வீச்சில் எங்களுடைய திட்டங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நூலிழையில் தவறாக வீசினாலும் மைதானத்திற்கு வெளியே அடிக்கப்படுவீர்கள். இதற்கான மொத்த பாராட்டுக்களும் ஆஸ்திரேலியாவை சேரும்”

இதையும் படிங்க: இந்த மாதிரி ஒரு கிளீன் ஹிட்டிங்கை இப்போதான் பாக்குறேன். வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பூரிப்பு

“குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் நாங்கள் இன்னும் சற்று சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அங்கே மேக்ஸ்வெலை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போட்டி நடைபெற்ற மைதானம் நன்றாக இருந்ததால் பந்து வேகமாக பறந்தது. எங்களுடைய துவக்க வீரர்கள் இத்தொடரில் தடுமாறினாலும் கடந்த 18 மாதங்களில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம். இதிலிருந்து விரைவாக வெளிவந்து முன்னேற வேண்டிய விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்த போட்டிக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement