மெகா அப்செட்.. வலுவான தெ.ஆ அணியை வீழ்த்திய நெதர்லாந்து.. 16 வருடம் கழித்து மாபெரும் சரித்திர வெற்றி

RSA vs NED 2
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 17ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா நகரில் நடைபெற்ற 15வது லீக் வலுவான தென்னாப்பிரிக்காவை கத்துக்குட்டியான நெதர்லாந்து எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டி மழையால் தாமதமானதால் இருதரப்புக்கும் 23 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்துக்கு விக்ரம்ஜித் சிங் 2, மேக்ஸ் ஓ’தாவுத் 18, ஆக்கர்மேன் 12, பஸ் டீ லீடி 2, எங்கேல்பேர்ச்ட் 19 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 82/5 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த நிதமனரு 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய எட்வர்ட்ஸ் 50 ரன்கள் கடந்து போராடிய நிலையில் அடுத்ததாக வந்த வேன் பீக் முடிந்தளவுக்கு போராடி 10 (17) ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனால் அந்த நிலைமையில் வந்த வேன் டெர் மெர்வி அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 (19) ரன்களில் அவுட்டாக கடைசி நேரத்தில் ஆரியான தத் 3 சிக்சருடன் 23* (8) ரன்கள் விளாசினார்.

அவர்களுடன் மறுபுறம் அசத்திய எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ரன்கள் எடுத்ததால் 43 ஓவரில் நெதர்லாந்து 245/8 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, மார்க்கோ யான்சன், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். குறிப்பாக கடைசி 9 ஓவரில் மட்டும் அந்த அணி 109 ரன்கள் குவித்தது போட்டியில் திருப்ப முனையாக அமைந்தது. அதை தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே குயிண்டன் டீ காக் 20 ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரில் தெம்பா பவுமா 16 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

அதை விட வேன் டெர் டுஷன் 4, ஐடன் மார்க்கம் 1, ஹென்றிச் க்ளாஸென் 28 என 3 முக்கிய வீரர்கள் அடுத்த சில ஓவர்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர். அதனால் 89/5 என சரிந்த தென் ஆப்பிரிக்காவை டேவிட் மில்லர் காப்பாற்ற போராடிய நிலையில் எதிர்புறம் மார்கோ யான்சென் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மில்லரும் போராடி 43 ரன்களில் அவுட்டாக எதிர்ப்புறம் வந்த ஜெரால்ட் கோட்சி, ரபாடா 22 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்த போதிலும் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் மிரட்டிய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக், வேன் மீக்ரம், வேன் டெர் மெர்வி, பஸ் டீ லீடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் காரணமாக 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து மாபெரும் சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க: மெகா அப்செட்.. வலுவான தெ.ஆ அணியை வீழ்த்திய நெதர்லாந்து.. 16 வருடம் கழித்து மாபெரும் சரித்திர வெற்றி

அத்துடன் 2003இல் நமீபியா 2007இல் ஸ்காட்லாந்தை தோற்கடித்த அந்த அணி 16 வருடங்கள் கழித்து உலக கோப்பையில் முதல் முறையாக ஒரு வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் தோற்கடித்தது போலவே தென்னாப்பிரிக்காவை மீண்டும் நெதர்லாந்து தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Advertisement