1992 ஃபைனலில் வாசிம் அக்ரம்.. 2011 ஃபைனலில் ஜெயவர்தனே செஞ்சதை பாருங்க.. பாபருக்கு கம்பீர் அட்வைஸ்

Gautam Gambhir
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 7 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் முதல் முறையாக விளையாடும் அந்த அணி முதல் 2 போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்தது.

ஆனால் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக ஒரு லட்சம் ரசிகர்கள் நிறைந்த அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்யாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 154/2 என்ற நிலையிலிருந்தும் அதன் பின் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு சுருண்டு உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவிடம் தோற்றது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

- Advertisement -

கம்பீர் அட்வைஸ்:
முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்ட நிலையில் 3வது போட்டியில் 50 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக அரை சதமும் அடித்தார். ஆனால் 50 ரன்கள் தொடுவதற்காக மெதுவாக விளையாடிய அவர் அடுத்த பந்திலேயே அவுட்டானதே பாகிஸ்தானின் சரிவுக்கு அடித்தளமிட்டது.

இந்நிலையில் எப்போதுமே சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதை விட அணிக்காக விளையாடினால் மட்டுமே வரலாற்றில் இடம் பெற முடியும் என்று பாபர் அசாமுக்கு ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம், மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரை சுட்டிக்காட்டி கௌதம் கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷாஹித் அப்ரிடி, இம்ரான் நசீர், சயீத் அன்வர், அமீர் சோஹைல் என பாகிஸ்தான் தங்களுடைய வரலாற்றில் அதிரடியாக விளையாடும் வீரர்களை கொண்டிருந்தது”

- Advertisement -

“ஆனால் தற்போதைய அணியில் டாப் 3 பேரில் யாருமே அப்படி விளையாடுபவர்களாக இல்லை. அந்தக் குறையை போக்க யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டுமெனில் அது 3வது இடத்தில் விளையாடும் கேப்டனாக இருக்க வேண்டும். எப்போதுமே நீங்கள் புள்ளிவிவரங்களை பார்ப்பதில் பயனில்லை. ஒருவேளை அதை பார்த்தால் நீங்கள் பாகிஸ்தானுக்காக நிறைய ரன்கள் அடித்தவராக வர முடியும்”

இதையும் படிங்க: இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல் – எப்படி சமாளிப்பாங்களோ?

“ஆனால் ஐசிசி தொடர்களை வெல்வதன் வாயிலாகவே உங்களது பெயர் நீடித்திருக்கும். குறிப்பாக 1999 உலகக்கோப்பை ஃபைனலில் வாசிம் அக்ரம் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இத்தனைக்கும் 5 விக்கெட்டுகளை எடுக்காத போதிலும் உலகக் கோப்பையை வென்றதன் காரணமாக அவரைப்பற்றி அனைவரும் பேசுகின்றனர். அதே போல 2011 உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்த போதிலும் மகிளா ஜெயவர்தனேவை பற்றி யாரும் பேசுவதில்லை. மாறாக உலகக்கோப்பையை இந்தியா வென்றதை தான் அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement