இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல் – எப்படி சமாளிப்பாங்களோ?

PAK
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு இம்முறை பாகிஸ்தான் இந்தியா வந்ததால் வந்துள்ளதால் அந்த அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் துவங்கிய பாகிஸ்தான் அணி மூன்றாவது போட்டியில் இந்திய அணி இடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியில் உள்ள குறைகள் பலவற்றையும் முன்னாள் வீரர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக வரும் அக்டோபர் 20-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு பெங்களூரு திரும்பிய பாகிஸ்தான அணியில் விளையாடிய வீரர்கள் அப்துல்லா ஷபிக் மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

மேலும் 15 பேர் கொண்ட அணியில் உள்ள ஒசாமா மீர் மற்றும் பக்கர் சமான் ஆகியோருக்கும் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்குள் அவர்கள் குணமடைவார்களா? என்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 80/5 என சரிந்தாலும் கடைசி 9 ஓவரில் 109 ரன்கள்.. தென்னாப்ரிக்காவை நொறுக்கி நெதர்லாந்து அணி செய்த சம்பவம்

ஒருவேளை காய்ச்சல் நீடித்தால் அந்த அணிக்கு அது பின்னடைவாக கூட மாறலாம். இருப்பினும் பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு தகவலில் அவர்கள் அனைவருமே தற்போது தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து அடுத்த போட்டிக்குள் அவர்கள் அணிக்கு திரும்பி விடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement