9 பந்தில் 50 ரன்கள்..யுவி, ரோஹித் சாதனை உடைந்ததா.. 20 ஓவரில் 314 ரன்கள்.. மங்கோலியாவை சிதைத்த நேபாள் – 5 உலக சாதனை

Nepal
- Advertisement -

சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. அதை தொடர்ந்து ஆடவர் டி20 போட்டிகள் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஹங்கொழு நகரில் துவங்கியுள்ளது. அதில் இன்று காலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் மங்கோலியாவை நேபாள் எதிர்கொண்டது. குறிப்பாக மங்கோலியா முதல் முறையாக இந்த போட்டியில் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளது.

அதன் காரணமாக அந்த அணியின் 11 வீரர்களும் இந்த போட்டியில் தான் அறிமுகமான நிலையில் டாஸ் வென்ற மங்கோலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நேபாள் அணிக்கு கவுசல் புர்டெல் 19 (23) ஆசிப் சேக் 16 (17) என துவங்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த கௌசல் மல்லா மற்றும் கேப்டன் ரோகித் பவுடேல் ஆகியோர் மங்கோலியா பவுலர்களை கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள்.

- Advertisement -

பல உலக சாதனைகள்:
போதாகுறைக்கு போட்டி நடைபெற்ற மைதானம் மிகவும் சிறியதாக இருந்ததை பயன்படுத்திய இந்த ஜோடி வெறித்தனமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார்கள். அதில் 34 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட கவுசல் மல்லா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2017இல் ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முறையே இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக தலா 35 பந்துகளில் 100 ரன்கள் தொட்டதே முந்தைய சாதனையாகும்.

மறுபுறம் கேப்டன் பவுடேல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 61 (27) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த திபேந்திரா ஆரி மங்கோலிய பவுலர்கள் கலங்கும் அளவுக்கு 8 சிக்ஸர்களை விளாசி 9 பந்துகளில் 50 ரன்கள் கடந்து மொத்தம் 52* (10) ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக அரை சதமடித்து வீரர் என்ற யுவராஜ் சிங் (12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007) சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

மறுபுறம் கவுசல் மல்லா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 137* (50) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 314/3 ரன்கள் எடுத்த நேபாள் 300 ரன்கள் குவித்த அணியாகவும் அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் இரட்டை உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2019இல் அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 278/3 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதைத் தொடர்ந்து 315 ரன்கள் துரத்திய மங்கோலியாவை 13.1 ஓவரில் 41 ரன்களுக்கு சுருட்டி 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நேபாள் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: எங்களுக்குள் நடந்து ஒரு மீட்டிங் தான். அதுக்குன்னு இப்படியெல்லாம் பேசுவாங்கனு நான் நினைக்கல – பாபர் அசாம் விளக்கம்

இதற்கு முன் 2019இல் துருக்கிக்கு எதிராக சீசெஸ் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். மங்கோலியா சார்பில் அதிகபட்சமாக ஜாம்யான்சுரேன் 10 (23) ரன்கள் எடுக்க நேபாள் சார்பில் அதிகபட்சமாக கரண், போஹரா, சந்தீப் லமிசன்னே தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement