எங்களுக்குள் நடந்து ஒரு மீட்டிங் தான். அதுக்குன்னு இப்படியெல்லாம் பேசுவாங்கனு நான் நினைக்கல – பாபர் அசாம் விளக்கம்

Babar-Azam
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதோடு அந்த அணி தற்போது சரியான கலவையில் தரமான வீரர்களுடன் இருந்து வருவதால் ஆசியகோப்பை தொடரையும் கைப்பற்றும் என்று பலரால் பேசப்பட்டது. ஆனால் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அந்த சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது.

எதிர்வரும் உலக கோப்பை தொடரிலும் அபாயகரமான அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி தற்போது தரவரிசையில் தங்களது முதல் இடத்தை இழந்திருந்தாலும் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். அதேபோன்று அவர்களிடம் உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணிக்குள் சரியாக உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஆசியகோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக தோல்வி அடைந்த போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வீரர்களின் ஓய்வறையில் கடுமையான விவாதத்தை நடத்தினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் ஷாகின் அப்ரிடி மற்றும் பாபர் அசாமிற்கும் இடையே வார்த்தை மோதல் முற்றி கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், நேரடியாக ஒருவரை ஒருவர் கடிந்து பேசியதாகவும் அவர்கள் இருவரையும் விக்கெட் கீப்பர் முஹமது ரிஸ்வான் சமாதானப்படுத்தினார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பாபர் அசாம் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : மரியாதை என்பது எல்லாருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் நாம் மரியாதையை தர வேண்டும். இப்படி போட்டி நடைபெற்று நாங்கள் தோற்கும் போதெல்லாம் நடக்கக்கூடிய ஒரு வழக்கமான டீம் மீட்டிங் தான் அன்று நடைபெற்றது. ஆனால் நாங்கள் அன்று சண்டையிட்டுக் கொண்டது போன்று வெளியே செய்திகள் பரப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏதோ அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சுடீங்க.. இது விராட் கோலிக்கு தெரிஞ்சா.. இம்முறை நியூஸிலாந்தை நொறுக்குவோம் – சைமனுக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது மரியாதை என்பது எல்லோருக்கும் நிலையாக கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. எங்கள் அணியை நாங்கள் குடும்பத்தை நேசிப்பது போல நேசித்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவித சண்டையும் இல்லை. ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று பாகிஸ்தான அணியில் எந்த பிளவுமும் இல்லை என பாபர் அசாம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement