ஏதோ அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சுடீங்க.. இது விராட் கோலிக்கு தெரிஞ்சா.. இம்முறை நியூஸிலாந்தை நொறுக்குவோம் – சைமனுக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

- Advertisement -

சர்வதேச அரங்கில் முதன்மை கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா கடந்த 2013க்குப்பின் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போன்ற அழுத்தமான போட்டிகளில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோல்விகளை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. இத்தனைக்கும் சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை அடித்து நொறுக்கும் இந்தியா ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 10 வருடங்களாக ஏமாற்றத்தை சந்தித்து வருவது ரசிகர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்த காரணத்தால் இம்முறையும் இந்தியா உலக கோப்பையை வெல்லாது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். அந்த சூழ்நிலையில் இருதரப்பு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் இந்தியா பயமற்ற கிரிக்கெட்டை விளையாடத் தவறுவதே வெற்றிக்கு தடையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பதிலடி:
அதை விட அணியின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் இந்திய வீரர்கள் அனைவருமே சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாலேயே ஐசிசி தொடரில் சாதிக்க முடியவில்லை என்றும் அவர் சில வாரங்களுக்கு முன்பாக இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அதிரடியாக பேசியிருந்தார். இந்நிலையில் இந்த வார்த்தைகளை விராட் கோலி கேட்டால் நியூசிலாந்துக்கு சரியான அடி கொடுப்பார் என்று அவருக்கு ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன் 2019 உலகக் கோப்பையில் அதிர்ஷ்டத்தால் தோனியை ரன் அவுட்டாக்கி வெற்றி கண்ட நியூசிலாந்தை இம்முறை சொந்த மண்ணில் இந்தியா அடித்து நொறுக்கும் என்று தெரிவிக்கும் ஸ்ரீசாந்த் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி வர உள்ளது. எனவே அவர்கள் இந்தியா அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுகிறதா இல்லையா என்பதை விரைவில் அறிவார்கள்”

- Advertisement -

“இம்முறை நிச்சயமாக நாம் அவர்களை அடித்து நொறுக்குவோம். மேலும் 2019இல் அதிர்ஷ்டத்தால் அவர்கள் தோனியை ரன் அவுட்டாக்கினார்கள். அப்போட்டியில் வென்று அவர்கள் ஃபைனலில் அதற்கு முன் கோப்பையை வெல்லாத இங்கிலாந்தை வெற்றி பெற விட்டனர். நியூசிலாந்து எப்போதும் உலகக் கோப்பையை வெல்லப்போவதில்லை. வருங்காலத்தில் வென்றாலும் தற்போது அவர்களுக்கு மோசமான தோல்வி கிடைக்கலாம்”

இதையும் படிங்க: ஏதோ அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சுடீங்க.. இது விராட் கோலிக்கு தெரிஞ்சா.. இம்முறை நியூஸிலாந்தை நொறுக்குவோம் – சைமனுக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

“எனவே ஊடகத்தில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். குறிப்பாக நீங்கள் வார்த்தைகளை விடும் போது மீண்டும் வாங்க தயாராக இருங்கள். மேலும் இம்முறை நியூசிலாந்தை இந்தியர்கள் அடித்து நொறுக்குவார்கள் என்று சைமன் டௌலுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். இதற்கு முன் நீங்கள் ஐசிசி தொடர்களில் எங்களுக்கு எதிராக சில வெற்றிகளை பெற்றிருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தற்போது காலம் மாறியுள்ளது. நீங்கள் சொன்னதை விராட் கோலி போன்றவர்கள் கேட்டால் நியூசிலாந்துக்கு எதிராக எப்படி விளையாடுவார் என்பதை பார்ப்பது வேடிக்கையாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement