இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போது கொடுத்த ஆஃபரை நான் தான் மறுத்து விட்டேன் – நெஹ்ரா வருத்தம்

Nehra
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஸ் நெஹ்ரா கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2017 வரை விளையாடி இருந்தார். மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடியுள்ள நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 240-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிகச் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ராவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எட்டு ஆண்டுகளை தவறவிட்டார்.

Nehra

- Advertisement -

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக 2009 வரை நான்கு ஆண்டுகளை தவறவிட்ட அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக 2015 வரை நான்கு ஆண்டுகளை தவறவிட்டார். இப்படி காயத்தால் அவரது கிரிக்கெட் கரியரில் மிகப்பெரிய இடைவெளி விழுந்தாலும் மீண்டும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வந்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

இந்நிலையில் 2009-ம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்தபோது தனக்கு அளித்த ஒரு வாய்ப்பை ஏற்க மறுத்ததாக வெளிப்படையான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். தற்போது 43 வயதாகும் இவர் தனது பிறந்தநாள் அன்று அளித்த சிறப்பு பேட்டியில் தோனி குறித்தும் இந்திய அணியில் அவர் கொடுத்த வாய்ப்பு குறித்து வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை விளையாடவில்லை. அந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணியில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனாலும் நான் காயத்தில் இருந்து வெளியேறிய பிறகு மிக கடுமையான பயிற்சி செய்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தேன். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி என்னிடம் வந்து மிக ஆதரவாக பேசினார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு வழங்குவதாகவும் நீங்கள் நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவீர்கள் எனவே தயாராக இருங்கள் என்று கூறினார். ஆனால் நான் தான் மீண்டும் காயம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனத்தை செலுத்த டெஸ்ட் போட்டியில் தோனி கொடுத்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என வெளிப்படையாக தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு? எனக்கு அப்படி எதுவும் தெரில – தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டி

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டிலும் 2017ஆம் ஆண்டு வரை விளையாடி வந்த ஆஷிஷ் நெஹ்ரா தற்போது குஜராத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நெஹ்ரா 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement