நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு? எனக்கு அப்படி எதுவும் தெரில – தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டி

Pandya
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டி நேற்று டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரரான சாய் சுதர்சன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Sai Sudharsan

- Advertisement -

அதனை தொடர்ந்து 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணி அடைந்த தோல்விக்கு காரணம் அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தான் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அனைத்திலும் குஜராத் அணி சேசிங் செய்யும் போது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து போட்டிகளையும் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது. இப்படி ஒரு நிலையில் பாண்டியா டாஸ் வென்று ஏன் முதலில் பேட்டிங் செய்தார் என்ற கேள்வி பெருமளவில் எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தோல்விக்குப் பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை. 170 ரன்கள் வரை அடித்து இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியும். டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்வது என்பது ஒரு தவறான முடிவு கிடையாது. ஏனெனில் நாங்கள் தற்போது சேசிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே எங்களுடைய கம்போர்ட் ஜோனில் இருந்து வெளிவந்து முதலில் பேட்டிங் செய்தது எவ்வளவு டார்கெட் நிர்ணயிக்க முடியும் என்று சோதித்து பார்க்க விரும்பினோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து நாங்கள் தோற்று இருந்தாலும் இந்த தோல்வியில் இருந்து நிறைய பாடங்களை கற்று உள்ளோம். ஏனெனில் இதற்கு அடுத்து வரும் போட்டிகளில் இதேபோன்று முதலில் பேட்டிங் செய்யும் சூழல் ஏற்படலாம். அப்போது நாம் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை பறிசோதிக்கவே இதுபோன்ற போட்டிகள் நமக்கு பாடமாக அமையும் என்று கூறினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் சதத்தை 1 ரன்னில் தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான டாப் 5 வீரர்களின் – லிஸ்ட் இதோ

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வர இருப்பதால் தற்போது அடைந்த தோல்வி பற்றி யோசிக்காமல் அடுத்த வெற்றிக்காக நாங்கள் தீவிரமாக கவனத்தை செலுத்த உள்ளோம் என்றும் டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்தது ஒரு தவறான முடிவு கிடையாது என்றும் பாண்டியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement