- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருவேளை தோனி சொன்ன மாதிரி கப் நமக்கு தானோ – இந்திய ரசிகர்கள் உற்சாகம், காரணம் இதோ

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மெல்போர்ன் நகரில் கடைசி பந்து வரை அனல் தெறித்த அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவின் கதை முடிந்ததாக ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் அப்போது இணைந்த கைகளாக ஜோடி சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை விராட் கோலியுடன் தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் பதறாமல் கூலாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஒயிட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார். அப்போட்டியில் 2வது ஓவரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாக நின்று ஹாரிஸ் ரவூஃப், சாஹீன் அப்ரிடி போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டு 82* (53) ரன்கள் குவித்து வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய விராட் கோலி அசாத்தியமான வெற்றியை பெற்றுக்கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்தார்.

- Advertisement -

தோனியின் கணிப்பு:
அந்த மிரட்டலான வெற்றியை நினைத்து இப்போதும் புல்லரிக்கும் இந்திய ரசிகர்களும் வீரர்களும் இந்த உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை பெற்றுள்ளார்கள். ஏனெனில் என்னதான் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக முன்னேறினாலும் மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியதும் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் டெத் ஓவர் பவுலிங், சுமாரான ஓப்பனிங் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் இந்த வெற்றி அனைத்து வீரர்களிடமும் புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அத்துடன் பரம எதிரியான பாகிஸ்தானை பழி தீர்த்து முதல் போட்டியில் பதிவு செய்த இந்த வெற்றி நாக்-அவுட் சுற்று செல்வதற்கான வாய்ப்பை ஆரம்பத்திலேயே 50 – 70% உறுதி செய்துள்ளது. அதனால் மகிழ்ச்சியடையும் ரசிகர்கள் இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கூறிய ஒரு கருத்தை நினைத்து மேலும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

- Advertisement -

1. அதாவது பிரபல ஓரியோ பிஸ்கட்டின் புதிய வடிவத்தை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்திய எம்எஸ் தோனி கடந்த 2011ஆம் ஆண்டு இதே பிஸ்கட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அடுத்த சில மாதங்களில் 28 வருடங்கள் கழித்து இந்தியா உலகக் கோப்பையை வென்றதாக கூறினார். அதே போல் தற்போது மீண்டும் அந்த பிஸ்கட் அறிமுகப் படுத்தப்படுவதால் என்ன நடக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்ற வகையில் தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் பிரபலமானது.

2. ஆனால் வெல்வதற்கு திறமை தேவையே தவிர பிஸ்கட் தேவையில்லை என்று நிறைய ரசிகர்கள் அவரை வெளிப்படையாகவே கிண்டலடித்ததை பார்க்க முடிந்தது. இருப்பினும் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக வலுவான இங்கிலாந்தை கத்துக்குட்டி அயர்லாந்து தோற்கடித்து புதிய சாதனை படைத்தது.

- Advertisement -

3. கடந்த 2011ஆம் ஆண்டும் பெங்களூருவில் முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்தை அயர்லாந்து தோற்கடித்தது. அந்த வருடம் இந்தியாவும் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கோப்பையை வென்றது.

3. எனவே தற்போது 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல் முறையாக இங்கிலாந்தை அயர்லாந்து தோற்கடித்துள்ளதால் ஒருவேளை தோனி கூறியது போல் 2022 டி20 உலகக்கோப்பை நமக்கு தானோ என்று சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க : வங்கதேசத்தை ஓடவிட்ட தெ.ஆ வீரர் – அதிரடி வெற்றியுடன் டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள்

பொதுவாக நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள் அந்த வகையில் இந்த உலக கோப்பையில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தோனி கூறியது போல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால் அது கொண்டாடக் கூடியதாகும்.

- Advertisement -
Published by