இதே அந்த மேட்ச்சா இருந்திருந்தா இந்தியா ஜெய்ச்சுருப்பாங்க.. 2023 உ.கோ தோல்வி பற்றி மஞ்ரேக்கர் விமர்சனம்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6வது முறையாக ஆஸ்திரேலியா தட்டி சென்றது. மறுபுறம் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்ததால் 2011 போல கோப்பையை வெல்லும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 2013க்குப்பின் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் செய்து வரும் அதே சொதப்பலை மீண்டும் அரங்கேற்றி வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற அதே போட்டி நாக் அவுட் சுற்றுக்கு பதிலாக லீக் போட்டியாக நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா ஜெயிச்சுருப்பாங்க:
அதாவது நாக் அவுட் அழுத்தத்தில் கடந்த 10 வருடங்களில் செய்து வரும் அதே சொதப்பலை மீண்டும் இந்தியா ஃபைனலில் அரங்கேற்றியதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அதே நாளில் அது இலங்கைக்கு எதிராக லீக் போட்டியாக நடைபெற்றிருந்தால் இந்தியா அடித்து நொறுக்கி வென்றிருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அப்போட்டியில் இருந்த கடினத்தை நான் அதிகமாக பார்க்கிறேன். குறிப்பாக விக்கெட் கைவசம் இல்லாததால் மெதுவாக இருந்த பிட்ச்சில் கேஎல் ராகுல் மற்றும் இதர வீரர்கள் நகர்வதற்கு திண்டாடினார்கள். ஒருவேளை இதே போட்டி லீக் சுற்றி இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக நடைபெறுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது இந்தியா ரிஸ்க் எடுத்து விளையாடியிருக்குமா?? என்று நீங்கள் கேட்டால் ஆம் எடுத்திருப்பார்கள் என்று சொல்வேன்”

- Advertisement -

“அங்கே தான் பதற்றம் இல்லாத சூழ்நிலை இருக்கும். ஒருவேளை இதே போட்டி லீக் சுற்றில் நடைபெற்றிருந்தால் இந்தியா வித்தியாசமாக விளையாடி இருக்கும். அதே சமயம் 6வது இடத்தில் பேட்டிங் முடிவதுடன் 7வது இடத்தில் ஜடேஜா இருக்கும் குறையை இத்தொடர் முழுவதும் இந்தியா அழகாக சமாளித்து விளையாடியது. ஆனால் பேட்டிங் வரிசையில் ஆழமில்லாத அழுத்தத்தை நாக் அவுட்டில் தான் அவர்கள் உணர்ந்தனர்”

இதையும் படிங்க: அவர் தான் அடுத்த ஜூனியர் ஷமியா வருவாரு.. இளம் இந்திய வீரரை பாராட்டிய அஸ்வின்

“அதனாலயே கேஎல் ராகுல் நமக்கு பின் பேட்டிங் வரிசையில் ஆழம் இல்லை என்பதை உணர்த்து மெதுவாக விளையாடினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் 2/3 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்றும் வென்ற இந்தியா இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபைனலில் ரோஹித் சர்மாவின் நல்ல துவக்கத்தையும் தாண்டி அழுத்தத்தில் அசத்த முடியாமல் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement