IND vs PAK : சுழலில் பாகிஸ்தானை சுருட்டிய குல்தீப் – ஆசிய கோப்பையில் 35 வருடத்துக்கு பின் அபார சாதனை, சச்சினுக்கு நிகராக அசத்தல்

Kuldeep yadav
- Advertisement -

இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் துவங்கியது. இருப்பினும் மழைக்கு மத்தியில் ரிசர்வ் நாள் வரை சென்ற அந்த போட்டியில் பாகிஸ்தானை பேட்டிங், பவுலிங் அனைத்து துறைகளிலும் பந்தாடிய இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 356/2 ரன்கள் குவித்து வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது.

குறிப்பாக 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் எடுக்க 3வது விக்கெட்டுக்கு 233 மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய கேஎல் ராகுல் சதமடித்து 111* ரன்களும் விராட் கோலி சதமடித்து 122* ரன்கள் குவித்தனர். அதைத்தொடர்ந்து 357 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 32 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

குல்தீப் மேஜிக்:
அதிகபட்சமாக பகார் ஜமான் 27 ரன்கள் எடுக்க பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை சுவைத்து ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் வாய்ந்து விக்கெட்டுகளை சாய்த்தார். அதிலும் 8 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்த குல்தீப் யாதவ் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி பக்கார் ஜமான் 27, சல்மான் 23, இப்திகார் அகமது 23, சடாப் கான் 6, பாஹிம் அஸ்ரப் 4 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கினார்.

அதனால் வரலாற்றிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் இதன் வாயிலாக 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் 35 வருடங்கள் கழித்து ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற அபாரமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 1988ஆம் ஆண்டு தாக்காவில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக முன்னாள் வீரர் அர்சத் ஆயுப் 9 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி அந்த சாதனையை முதல் வீரராக படைத்திருந்தார். அத்துடன் 2005இல் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்த இந்தியர் என்ற பெருமையும் குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: பந்து வீச்சிலும் பாகிஸ்தானை கலங்கடித்த இந்தியா – ஒரே போட்டியில் ரன்ரேட்டில் ராக்கெட் முன்னேற்றம், ஃபைனல் கனவு உறுதியானதா?

கடந்த 2017இல் அறிமுகமாகி 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய குல்தீப் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021, 2022 டி20 உலகக்கோப்பை கழற்றி விடப்பட்டார். ஆனால் அதன் பின் கடுமையாக உழைத்து சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை தெறிக்க விட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் 2023 உலக கோப்பையில் சொந்த மண்ணிலும் அவர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement