பந்து வீச்சிலும் பாகிஸ்தானை கலங்கடித்த இந்தியா – ஒரே போட்டியில் ரன்ரேட்டில் ராக்கெட் முன்னேற்றம், ஃபைனல் கனவு உறுதியானதா?

IND vs PAK ASia Cup
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் இருக்கும் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 356/2 ரன்கள் குவித்து மிரட்டியது. குறிப்பாக கடந்த போட்டியில் மிரட்டலை கொடுத்த சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 121 ரன்கள் ஓப்பனிங் ஃபார்மன்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தார்.

அவருடன் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானதை தொடர்ந்து மழை வந்தால் ரத்து செய்யப்பட்ட போட்டி மீண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா 356 ரன்கள் குவிக்க உதவினர்.

- Advertisement -

அபார வெற்றி:
அதில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பி விட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில் பேட்டிங் செய்து 12 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 111* (106) ரன்கள் எடுக்க மறுபுறம் தமக்கு மிகவும் பிடித்த பாகிஸ்தானை பந்தாடிய விராட் கோலியும் 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 122* (94) ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் சடாப் கான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 357 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 9, கேப்டன் பாபர் அசாம் 10, முகமது ரிஸ்வான் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டாக பகார் ஜமான் 27, சல்மான் ஆஹா 23, சடாப் கான் 6 போன்ற இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் குல்தீப் யாதவ் சுழலில் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 32 ஓவரில் 128 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டி ஆல் அவுட்டாக்கிய இந்தியா மழையையும் கடந்து இப்போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார். மேலும் இப்படி முதல் போட்டியிலேயே பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் சூப்பர் 4 புள்ளி பட்டியலில் +4.560 என்ற மிகப்பெரிய ரன் ரேட்டை பெற்றுள்ள இந்தியா அதே 2 புள்ளிகளை கொண்டுள்ள இலங்கையை முந்தி முதலிடத்தை பிடித்து கிட்டத்தட்ட ஃபைனல் வாய்ப்பை இப்போதே 90% உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: கே.எல் ராகுல் சதத்தால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் ஆப்பு. இந்திய அணியில் ஏற்பட்டுள்ள திருப்பம் – விவரம் இதோ

அதனால் அடுத்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பதிவு செய்தால் கூட இந்தியா ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2 போட்டிகளின் முடிவில் 2 புள்ளிகளை -1.892 என்ற குறைவான ரன்ரேட்டில் மட்டுமே பெற்றுள்ளதால் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement