பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோரின் தற்போதைய நிலை என்ன? – வெளியான தேசிய அகாடமி கொடுத்த அப்டேட்

Harshal-and-Bumrah
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தெளிவான தகவலை வெளியிட்டது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

இந்த ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் அவர்கள் இருவரும் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரும் தற்போது காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் ஆசிய கோப்பைக்கான அணியில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர். அதோடு அவர்களுக்கான சிறப்பு பயிற்சியும் அவர்களுக்கு அங்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

Bumrah

எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அவர்கள் இருவரும் இடம் பெற வேண்டும் என்பதற்காக தற்போது அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது உடல்நிலை குறித்த முக்கிய தகவலை தேசிய கிரிக்கெட் அகாடமி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இருவரும் இன்று காலை முதல் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கில் முதல் சதமடிக்க காரணமே யுவிதான் – வெளியான பின்னணி தகவல் (கோலிக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடுங்க)

அதோடு அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அவர்கள் இருவரும் தயாராகும் வகையில் இன்றிலிருந்து அவர்களுக்கு பந்துவீச்சு பயிற்சி மற்றும் பிட்னஸ் பயிற்சி ஆகிய இரண்டுமே துவங்கியுள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement