- Advertisement -
ஐ.பி.எல்

அப்படியே சுனில் கவாஸ்கரை பாத்த மாதிரியே இருந்தது.. சாய் சுதர்ஷனை ஆஹா ஓஹோவென – புகழ்ந்த நவ்ஜோத் சிங் சித்து

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமான தமிழக வீரரான சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியிலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக தற்போது உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை அந்த அணியின் நிர்வாகம் தக்க வைக்கும் அளவிற்கு சிறப்பான செயல்பாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே சாய் சுதர்சன் வெளிப்படுத்தி வருகிறார்.

சாய் சுதர்சனுக்கு ரசிகராகவே மாறிட்டேன் : நவ்ஜோத் சிங் சித்து

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரிலும் சுப்மன் கில்லுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள முதல் மூன்று போட்டிகளில் குஜராத் அணி முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து மும்பை மற்றும் பெங்களூரு என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளது.

- Advertisement -

இந்த இரண்டு வெற்றிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி பெறுவதற்கு மிக முக்கிய பங்கு சாய் சுதர்சனுக்கும் உண்டு என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்து நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் முறையை 74, 63, 49 என பிரமாதமான ரன் குவிப்பை வழங்கியுள்ள சாய் சுதர்சன் இனிவரும் போட்டிகளிலும் அசத்த காத்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டம் தன்னை ஈர்த்ததாகவும் அவர் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரை போன்றே விளையாடுவதாக நவ்ஜோத் சிங் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

சாய் சுதர்சனை போன்ற ஒரு தொழில்நுட்ப ரீதியான துவக்க வீரரை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் விளையாடுவதை பார்க்கும் போது சுனில் கவாஸ்கர் போன்று இருக்கிறது. அவர் பேட்டிங் செய்ய நிற்பதும், அவர் பந்தை அடிப்பதும் என அனைத்துமே சுனில் கவாஸ்கரை போன்று இருக்கிறது. அவருடைய ஆட்டத்தை பார்த்த நான் அவருக்கு ரசிகராகவே தற்போது மாறியுள்ளேன்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் பிராவோ மற்றும் அஷ்வின் ஆகியோரது சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

இந்திய அணிக்காக எந்த வடிவத்திலும் இடம்பெறக்கூடிய தகுதி அவரிடம் உள்ளது. அந்த அளவிற்கு அவர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -