ஐ.பி.எல் வரலாற்றில் பிராவோ மற்றும் அஷ்வின் ஆகியோரது சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்தது.

அஷ்வின், பிராவோ ஆகியோரது சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 33 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக பட்லர் 73 ரன்களையும், சாய் சுதர்சன் 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட் மூலம் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் ஜாம்பவானான ப்ராவோ மற்றும் தற்போதைய சிஎஸ்கே அணி வீரரான அஸ்வின் ஆகியோரது சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதனையில் : இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 206 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பியூஷ் சாவ்லா 192 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தில் அஸ்வின் மற்றும் பிராவோ ஆகியோர் 183 விக்கெட்டுக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : அவசரப்பட்டு கோட்டை விட்டுட்டேன்.. அதை நெனச்சா ரொம்ப சங்கடமா இருந்தது – ஜாஸ் பட்லர் பேட்டி

இவ்வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் எடுத்த ஒரு விக்கெட்டின் மூலம் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் மற்றும் பிராவோ ஆகியோருடன் மூன்றாவது இடத்தினை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement