அதுல தோனியை விட பெஸ்ட்.. சச்சினை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்.. நவ்ஜோத் சித்து பாராட்டு

Navjot Sidhu 3
- Advertisement -

சர்வதே கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்கு 80களில் சுனில் கவாஸ்கர் மகத்தான பேட்ஸ்மேனாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதை தொடர்ந்து வந்த சச்சின் டெண்டுல்கர் 1990 – 2013 வரையிலான காலகட்டங்களில் உலகின் அத்தனை தரமான பவுலர்களுக்கும் சிம்ம சொப்பனமாக நின்று 100 சதங்கள் அடித்து இந்தியாவுக்கு பல மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

குறிப்பாக பேட்டிங்க்கு சவாலான விதிமுறைகளைக் கொண்ட காலகட்டங்களில் 16 வயதிலேயே அறிமுகமாகி வாசிம் அக்ரம், ஷேன் வார்னே போன்ற தரமான பவுலர்கள் ராஜாங்கம் நடத்திய நேரங்களில் அபாரமாக விளையாடிய சச்சின் 30000+ ரன்கள் குவித்துள்ளார். எனவே என்ன தான் தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் வந்தாலும் சச்சின் தான் மகத்தான இந்திய பேட்ஸ்மேன் என்று பலரும் சொல்வது வழக்கமாகும்.

- Advertisement -

தோனியை விட பெஸ்ட்:
இந்நிலையில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை விட தம்மை பொறுத்த வரை விராட் கோலி தான் இந்தியா கண்டெடுத்த மகத்தான பேட்ஸ்மேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார். அத்துடன் பிட்னஸ் என்று வரும் போது தோனியை விட விராட் கோலி மிகவும் தரமானவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

அதற்கான காரணத்தை பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை நான் சிறந்த பேட்ஸ்மேன் என்று மதிப்பிடுவேன். 70களில் வலுவான வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சுனில் கவாஸ்கர் பேட்டிங் செய்ததை நான் ரேடியோவில் கேட்ட காலங்கள் இருந்தது. குறிப்பாக மகத்தான வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஹெல்மெட் போடாமலேயே எப்படி எதிர்கொண்டார் என்பதை கேட்டது கவாஸ்கரின் சகாப்தம்”

- Advertisement -

“அவர் கிட்டத்தட்ட 15 – 20 வருடங்கள் ஆதிக்கம் செலுத்தினார். பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றொரு சகாப்தமாக வந்தார். அதைத் தொடர்ந்து தோனி வந்தார். தற்போது விராட் கோலி இருக்கிறார். இந்த நால்வரையும் நீங்கள் பார்க்கும் போது நான் விராட் கோலியை சேர்ந்த பேட்ஸ்மேன் என்று மதிப்பிடுவேன். ஏனெனில் 3 வெவ்வேறு விதமான கிரிக்கெட்டிலும் தன்னை அருமையாக பொருந்தியிருப்பதால் அவரை சிறந்தவர் என்று மதிப்பிடுகிறேன்”

இதையும் படிங்க: தோனி கூட சொதப்பி பாத்துருப்பீங்க.. ஆனா ரோஹித் சொக்கத்தங்கம்.. அதுல சொதப்புனதே கிடையாது.. பார்திவ் படேல்

“அதே போல அந்த நால்வரின் ஃபிட்னஸ் பற்றி பார்க்கும் போதும் விராட் கோலி முதலாவதாக இருப்பார். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய பிற்பகுதியில் பிரச்சினைகளைக் கொண்டிருந்தார். தோனி ஃபிட்டானவர். ஆனால் விராட் கோலி சூப்பர் ஃபிட்டாக இருப்பவர். அது அவரை நல்ல நிலையில் வைத்திருக்கிறது. அது மற்றவர்களால் சாதிக்க முடியாத சில உயர்ந்த நிலைக்கு அவரை உயர்த்துகிறது. நீண்ட காலம் விளையாடுவது அவருக்கு கூடுதல் பலமாகும்” என்று கூறினார்.

Advertisement