தோனி கூட சொதப்பி பாத்துருப்பீங்க.. ஆனா ரோஹித் சொக்கத்தங்கம்.. அதுல சொதப்புனதே கிடையாது.. பார்திவ் படேல்

Parthiv Patel
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றி விட்டுள்ளது. ஆரம்பக் காலங்களில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய அந்த அணிக்கு 2013இல் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் அடுத்த 10 வருடத்தில் 5 கோப்பைகளை வென்று மும்பை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்தார்.

அதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறியுள்ள ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்து மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விடுவதாக அறிவித்துள்ள மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

சொக்கத்தங்கம் ரோஹித்:
அதற்கு ஏராளமான மும்பை ரசிகர்களே சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அழுத்தமான நேரங்களில் மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி கூட சில சொதப்பலான தவறான முடிவுகளை எடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ஆனால் 2013 – 2023 வரையிலான காலகட்டங்களில் மும்பையின் கேப்டனாக இருந்த போது ரோஹித் சர்மா பெரும்பாலும் தவறு செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் ரோகித் சர்மா சொக்கத்தங்கத்தை போன்ற கேப்டனாக செயல்பட்டதாக பாராட்டும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “பொதுவாக ஒரு போட்டியில் பதற்றுமான சூழல் ஏற்படும் போது சில நேரங்களில் தவறான முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் கடந்த 10 வருடங்களில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எந்த தவறையும் செய்யாததே ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் தரத்திற்கு சான்றாகும்”

- Advertisement -

“ஒரு போட்டியில் பவன் நெகி’க்கு ஓவரை கொடுத்தது போல தோனி கூட சில தவறுகளை செய்துள்ளார். ஆனால் ரோகித் சர்மாவிடம் நீங்கள் சொதப்பல்களான தவறுகளை பார்க்க முடியாது. செயல்முறைகளை எளிமையாக வைத்திருக்க வேண்டும் என்பது தோனி அறிவுறுத்தும் ஒன்றாகும். ஆனால் அதை ரோகித் சர்மா போட்டிகளில் நேரடியாக செய்து பார்ப்பதை நாம் பார்த்துள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆஸி அணியில் பாத்துருக்கேன்.. அதை தப்பு கணக்கு போட்றாதீங்க.. விராட் கோலி பற்றி எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்

இந்த நிலையில் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் ரோகித் சர்மா தன்னுடைய தரத்திற்கு நிகராக பெரிய ரன்கள் குவிக்கவில்லை. எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ள அவர் பெரிய ரன்கள் குவித்து 20 ஓவர் கிரிக்கெட்டில் பழைய ஃபார்முக்கு திரும்பும் முனைப்புடன் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement