ஆஸி அணியில் பாத்துருக்கேன்.. அந்த தப்பு கணக்கு போட்றாதீங்க.. விராட் கோலி பற்றி எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்

Steve Smith 3
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் நிறைவு பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. குறிப்பாக தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்ததால் விளையாடாத அவர் அடுத்ததாக ஐபிஎல் 2024 டி20 தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். இம்முறை நல்ல புத்துணர்ச்சியுடன் ஓய்வெடுத்து களமிறங்குவதால் அவர் பெரிய ரன்கள் குவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே ஐபிஎல் முடிந்ததும் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அதாவது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உள்ள பிட்ச்கள் சற்று மெதுவாக இருக்கும். மறுபுறம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் நன்கு செட்டிலான பின்பு அதிரடியாக விளையாடக்கூடிய அணுகுமுறையை கொண்டவர்.

- Advertisement -

ஸ்மித் எச்சரிக்கை:
எனவே அவருடைய ஸ்டைல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக்கோப்பையில் பொருந்தாது என்று தேர்வுக் குழுவினர் கருதுகின்றனர். அதனால் சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இருப்பினும் அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் மட்டும் டி20 கிரிக்கெட்டில் வெல்ல முடியாது என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலியை டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்து விடக்கூடாது என்ற எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சூழ்நிலையை பார்த்து விளையாடுபவர்”

- Advertisement -

“சில மைதானங்களில் நீங்கள் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டிய அவசியம் இருக்காது. உங்களுக்கு முன்னே என்ன சூழ்நிலை இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும். அந்த வகையில் இந்தியாவுக்காகவும் ஆர்சிபி அணிக்காகவும் விராட் கோலி சில மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடியதை நாம் பார்த்துள்ளோம். அந்த தருணங்களில் அப்படி அவர் விளையாடிய போது நான் ஆஸ்திரேலிய அணியில் எதிரே இருந்து பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க: லவ் யூ தல.. தோனி கொடுத்த அந்த பரிசு நெஞ்சுல இருக்கு.. மறக்கவே மாட்டேன்.. நெகிழ்ச்சியுடன் பேசிய ஜடேஜா

“அவர் அதிகப்படியான அழுத்தத்தின் கீழ் அசத்தக்கூடியவர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் அப்படி விளையாடுவதை விரும்புகிறார். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அழுத்தமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடிய வீரர்கள் தான் உங்களுடைய அணியில் இருப்பதை விரும்புவீர்கள். அது போன்ற சூழ்நிலைகளில் அனுபவமான வீரர்கள் தான் உங்களுக்காக உயர்ந்து நிற்பார்கள். விராட் கோலி அது போன்றவர்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.

Advertisement