லவ் யூ தல.. தோனி கொடுத்த அந்த பரிசு நெஞ்சுல இருக்கு.. மறக்கவே மாட்டேன்.. நெகிழ்ச்சியுடன் பேசிய ஜடேஜா

Jadeja Ms Dhoni
- Advertisement -

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

முன்னதாக கடந்த வருடம் எம்.எஸ். தோனி தலைமையில் அஜிங்க்ய ரகானே, சிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்களை வைத்து அசத்தலாக விளையாடிய சிஎஸ்கே 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. குறிப்பாக அகமதாபாத்தில் மழையால் 3 நாட்கள் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை தோற்கடித்து சென்னை வென்றது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

- Advertisement -

லவ் யூ தல:
ஏனெனில் அத்தொடரில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் ரசிகர்களால் மறக்க முடியாத ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்த ஜடேஜா அதைத் துள்ளிக் குதித்து கொண்டாடினார்.

மறுபுறம் அப்போது தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் கண்ணை மூடிக்கொண்டு பவுண்டரி எல்லையின் அருகே அமர்ந்திருந்த எம்எஸ் தோனி கடைசியில் வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை தன்னுடைய இடுப்பில் தூக்கி வைத்து கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார். அந்த தருணம் சிஎஸ்கே ரசிகர்களின் வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் அந்த தருணத்தை சிஎஸ்கே நிர்வாகம் பெரிய புகைப்படமாக ஃபிரேம் செய்து சேப்பாக்கத்தில் உள்ள சென்னை அணியின் உடைமாற்றும் அறையில் வைத்துள்ளது. அதைப் பார்த்த ரவீந்திர ஜடேஜா அந்த தருணம் தம்முடைய வாழ்நாளில் மறக்க முடியாதது என்று கூறியுள்ளார். இது பற்றி சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோவில் ஜடேஜா பேசியுள்ளது பின்வருமாறு. “அன்றைய நாளில் ஓடி வந்த என்னை நிறுத்திய தோனி அப்படியே தூக்கினார்”

இதையும் படிங்க: அந்த விஷயத்துல சேவாக் மாதிரியே விராட் கோலி லெவலுக்கு ரோஹித் சர்மா இல்ல.. நவ்ஜோத் சித்து ஓப்பன்டாக்

“கண்டிப்பாக அது எனது வாழ்நாளில் மறக்க முடியாத முக்கிய தருணமாகும். தோனியிடமிருந்து கிடைத்த அந்த கட்டிப்பிடியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அது என்னுடைய இதயத்தில் எப்போதும் நீங்காமல் இருக்கும் லவ் யூ தல, சியர்ஸ்” என்று பேசினார். இதைத் தொடர்ந்து 41 வயதை கடந்து விட்ட தோனி இம்முறையும் ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக தான் பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement