அந்த விஷயத்துல சேவாக் மாதிரியே விராட் கோலி லெவலுக்கு ரோஹித் சர்மா இல்ல.. நவ்ஜோத் சித்து ஓப்பன்டாக்

Navjot Sidhu 2
- Advertisement -

இந்தியாவுக்காக நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அதில் ஆரம்பம் முதலே டெஸ்ட் ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்று அபாரமான சராசரியில் விளையாடி வரும் விராட் கோலி 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

அதே போல ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி எதிரணிகளைப் பந்தாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். அந்த வகையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே நவீன கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு சரிக்கு சமமாக செயல்படும் தரமான பேட்ஸ்மேன்களாக அறியப்படுகின்றனர்.

- Advertisement -

விராட் கோலி லெவல்:
ஆனால் ஃபிட்னஸ் என்று வரும் போது ரோகித் சர்மா தொட முடியாத உயரத்தில் தான் விராட் கோலி இருக்கிறார் என்றால் மிகையாகாது. குறிப்பாக உலகின் இதர வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் அளவுக்கு துல்லியமான ஃபிட்னஸ் கடைபிடிக்கும் விராட் கோலி ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார்.

இந்நிலையில் வீரேந்திர சேவாக் போல அதிரடியாக விளையாடும் திறமை கொண்ட ரோகித் சர்மா ஃபிட்னஸில் நன்றாக இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஃபிட்னஸ் போன்ற சில எளிமையான காரணங்களுக்காக விராட் கோலியை நான் மகத்தான பேட்ஸ்மேன் என்று சொல்வேன். வயது அதிகரிக்க அதிகரிக்க அவர் ஃபிட்னஸில் பழைய சரக்கை போல முன்னேறி வருகிறார்”

- Advertisement -

“இது ரோகித் சர்மாவுக்கும் பொருந்தும். இருவருமே தரமான வீரர்கள். ஆனால் ரோகித் சர்மாவின் ஃபிட்னஸ் லெவல் பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை. வயது அதிகரிக்கும் போது உங்களுடைய அனிச்சைகள் செல்ல முயன்றாலும் நீங்கள் மெதுவாக செல்கிறீர்கள். சேவாக் போல அவருடைய அனிச்சைகள் ஒரே மாதிரியாக இல்லை. நான் அதை ஐபிஎல் தொடரில் பார்த்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 24.75 கோடி வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை தெறிக்க விட்ட ரிங்கு சிங்.. கெளதம் கம்பீர் கனவு பொய்யாகிடுமோ

இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோஹித் சர்மா சாதாரண வீரராக விளையாட உள்ளார். சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அவர் இம்முறை கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் விளையாட உள்ளார். எனவே இம்முறை ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் ரோகித் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement