24.75 கோடி வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை தெறிக்க விட்ட ரிங்கு சிங்.. கெளதம் கம்பீர் கனவு பொய்யாகிடுமோ

Rinku vs Starc
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இம்முறை 2012, 2014 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்று கொடுத்த கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட உள்ளது கொல்கத்தா அணிக்கு பலமாகவும் பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். அதன் வாயிலாக எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்திய ஜாம்பவான்களையே முந்திய அவர் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்தார்.

- Advertisement -

வெளுத்த ரிங்கு:
இருப்பினும் கடந்த காலங்களில் சாம் கரன், இஷான் கிசான் போன்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தத்தில் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமாக விளையாடி 2015, 2023 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு உதவிய அனுபவத்தை கொண்ட ஸ்டார்க் அழுத்தத்தை உடைத்து தங்களுடைய துருப்புச்சீட்டு வீரராக செயல்படுவார் என்று கௌதம் கம்பீர் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா அணியினர் இரு குழுவாகப் பிரிந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் புதிய பந்தை ஸ்விங் செய்து தன்னுடைய பலத்தை காட்டிய மிட்சேல் ஸ்டார்க் முதல் 3 ஓவரில் 1 விக்கெட் எடுத்து வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். ஆனால் கடைசி ஓவரில் அவர் வீசிய முதல் பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் ரிங்கு சிங் அசால்டான சிக்ஸரை தெறிக்க விட்டார்.

- Advertisement -

அதனால் பதற்றமடைந்த ஸ்டார்க் அந்த ஓவரில் 20 ரன்கள் (6, 1, 4, 4, 1 , 4) கொடுத்து மொத்தமாக 4 ஓவரில் 40 ரன்களுக்கு 1 விக்கெட்டை எடுத்து தன்னுடைய பவுலிங்கை முடித்தார். மறுபுறம் அட்டகாசமான ஃபினிஷிங் கொடுத்த ரிங்கு சிங் 31* (51) ரன்கள் குவித்தார். அதே போட்டியில் பில் சால்ட் 78 (41), நித்தீஷ் ராணா 50 (30) ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: ப்ளீஸ் என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விராட் கோலி – விவரம் இதோ

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்தாலும் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். அந்த வகையில் பயிற்சிப் போட்டியிலேயே மிட்சேல் ஸ்டார்க்கை இளம் வீரர் ரிங்கு சிங் அசால்ட்டாக அடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதே சமயம் துருப்பச்சீட்டு வீரராக செயல்படுவார் என்று கௌதம் கம்பீர் கணித்த மிட்சேல் ஸ்டார்க் முதன்மை போட்டிகளில் அடி வாங்காமல் அசத்த வேண்டும் என்பதே கொல்கத்தா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement