ப்ளீஸ் என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய விராட் கோலி தனது இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக லண்டனில் தங்கி இருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது.

இவ்வேளையில் இந்தியாவில் மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக பெங்களூரு அணியுடன் இணைந்த விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முன்னணி வீரராக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 16 ஆண்டுகளாகவே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பெங்களூர் அணி இம்முறை ரசிகர்களுக்காக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க காத்திருக்கிறது.

அதேபோன்று அண்மையில் நடைபெற்ற முடிந்த மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணி வெற்றி பெற்ற வேளையில் இந்த ஆண்டு ஆண்கள் அணியும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணி நிர்வாகம் ஏற்பாடு செய்த ஒரு பிரத்தியேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவ வீரரான விராட் கோலி :

- Advertisement -

தன்னை யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை யாரும் இனிமேல் “கிங்” என்று அழைக்க வேண்டாம். விராட் என்றே அழைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களை “கிங்” என்று அழைக்கும் போது கூச்சமாக உள்ளது.

இதையும் படிங்க : பாண்டியா என்ன செய்வாருன்னு தெரியல.. மும்பை அணியில் பெரிய வீக்னெஸ் இருக்கு.. கவாஸ்கர் பேட்டி

இனிமேல் என்னை விராட் என்றே அழையுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் வெகுவிரைவில் சென்னைக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது. எங்களுக்கான பிரத்யேக விமானமும் தயாராக உள்ளது. நாங்கள் நிச்சயம் இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement