இந்திய ஏ அணியில் கிடைத்த வாய்ப்பையும் காயத்தால் தவறவிட்ட இந்திய வீரர் – விவரம் இதோ

Saini-1
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள இந்திய அணியானது அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கிறது. அதனால் தற்போது இந்திய அணியானது தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வில்லாமல் விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இப்படி முதன்மை இந்திய அணிக்கு அடுத்தடுத்து தொடர்கள் இருப்பதினால் குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே இந்திய முதன்மை அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களை தவிர்த்து மற்ற இளம் வீரர்களுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்களுக்கான தொடர்களும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி இந்திய அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி இரண்டு டெஸ்ட் போட்டிகள், எட்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடி இருந்தாலும் அணியில் உள்ள போட்டி காரணமாக அவருக்கு கடந்த பல தொடர்களாகவே வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

Saini

இந்நிலையில் துலீப் டிராஃபில் விளையாடி வரும் அவர் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இணைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரிஷி தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய தொடரில் பார்முக்கு திரும்ப விராட் கோலியிடம் கேஎல் ராகுல் கற்க வேண்டிய 3 பாடங்கள்

ஏற்கனவே இந்திய சீனியர் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த நவ்தீப் சைனி எப்படியாவது இந்திய ஏ அணியில் தனது திறமையை நிரூபித்து மீண்டும் முதன்மை அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த வேலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மேலும் அவரை பின்னடைவை சந்திக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement