IND vs AUS : ஆஸ்திரேலிய தொடரில் பார்முக்கு திரும்ப விராட் கோலியிடம் கேஎல் ராகுல் கற்க வேண்டிய 3 பாடங்கள்

Rahul
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்தது. அந்த தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காக அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. அதில் துணை கேப்டனாக விளையாடும் கேஎல் ராகுல் தற்சமயத்தில் சுமாரான பார்மில் தவிப்பதால் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார்.

KL Rahul

- Advertisement -

ஆனால் அவரை விட சீனியராகவும் 24000+ ரன்கள் 71 சதங்களை விளாசி ஜாம்பவானாக சாதனை படைத்துள்ள விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அவரை விட தினம்தோறும் கடுமையான விமர்சனங்களை ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து முற்றுப்புள்ளி வைத்தார். அந்த வகையில் ஏற்கனவே நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழும் விராட் கோலியிடம் ஃபார்முக்கு திரும்ப கேஎல் ராகுல் கற்க வேண்டிய சில பாடங்களைப் பற்றிப் பார்ப்போம்:

3. அடிப்படை முக்கியம்: ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர்கள் என்பதைப் போலவே கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தனித்தனி ஸ்டைல், யுக்திகள் போன்றவற்றை கொண்டிருப்பார்கள். ஆனால் கிரிக்கெட் விளையாடத் துவங்கும் போது முதலில் அடிப்படைகளை கற்றுக் கொண்டுதான் நாளடைவில் தங்களது திறமைகளை அதில் இணைத்து தங்களுக்கென்ற ஸ்டைலை உருவாக்குவார்கள்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

இருப்பினும் உலகில் எந்த பேட்ஸ்மேன்களும் பார்மை இழக்கும் போது மீண்டும் அடிப்படைக்கு செல்ல வேண்டும் என்பதே வல்லுனர்கள் மற்றும் ஜாம்பவான்களின் அறிவுரையாக இருக்கும். அந்த வகையில் 2019 முதல் பார்முக்கு திரும்ப இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று நிறைய பேர் கொடுத்த ஆலோசனைகளை காதில் வாங்கினாலும் விராட் கோலி தன்னுடைய அடிப்படை பேட்டிங்கை தவறாமல் பின்பற்றி வந்தார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட செட்டிலான பின் தனக்குள் இருக்கும் அடிப்படை ஷாட்டுகளை அடித்து சதமடித்தார். எனவே ராகுலும் எதையும் காதில் வாங்காமல் தன்னுடைய அடிப்படையான ஆட்டத்தை பின்பற்ற முயற்சித்தாலே பெரிய ரன்கள் வந்துவிடும். ஏனெனில் அவர் பார்ம் அவுட் கிடையாது, காயத்திலிருந்து திரும்பியதால் தடுமாறுகிறார் அவ்வளவுதான்.

rahul 1

2. தைரியமான அட்டாக்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆரம்பம் முதலே அதிரடியை தொடங்கிய விராட் கோலி நேரம் செல்ல செல்ல மிரட்டலாக விளையாடி சதமடித்தார். பொதுவாக அனைத்து பேட்ஸ்மேன்களும் அம்மாதிரி விளையாடுவார்கள் என்ற நிலைமையில் அதேபோன்ற தொடக்கத்தை பெறுவதற்காக மெதுவாக பேட்டிங் செய்யும் ராகுல் கடைசி வரை அதையே பின்பற்றி திடீரென நல்ல பந்தில் அவுட்டாகி விடுகிறார். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெறும் அவருக்கு பவர்பிளே எனும் பொன்னான வாய்ப்பு எப்போதுமே உறுதுணையாக உள்ளது.

- Advertisement -

ஆனால் ஃபார்முக்கு திரும்ப பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுவது அவரை அறியாமலேயே அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தை அவருக்கு உண்டாக்குகிறது. எனவே பவர்பிளே எனும் பொன்னான வாய்ப்பில் தயக்கமும் பயமுமின்றி ஒரு சில பந்துகளை சந்தித்த பின் தைரியத்துடன் அட்டாக் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அவருடைய பழைய பார்ம் தாமாக வந்து விடும் பெரிய ரன்களும் வந்துவிடும்.

Rahul

1. இயற்கையான ஆட்டம்: 2019க்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக ராகுல் உருவெடுக்க 2018 ஐபிஎல் தொடரில் 659 ரன்களை 158.41 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட சீசன் தான் முக்கிய காரணமாகும். அந்த சமயத்தில் பெரிய அளவில் ஸ்டார் அந்தஸ்தை பெறாத அவர் குறைவான அழுத்தத்துடன் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே அந்த அதிரடியான ரன் குவிப்புக்கு காரணமாகும்.

இதையும் படிங்க : மறக்க முடியாத 6 சிக்ஸர்கள் – பழைய நினைவை ஸ்பெஷல் பார்ட்னருடன் இணைந்து பார்த்த யுவி, வாழ்த்தும் ரசிகர்கள்

ஆனால் தற்போது 17 கோடியை எட்டிய தனது மார்க்கெட்டை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுக்க முயற்சிக்கும் அவர் தன்னுடைய இயற்கையான பேட்டிங்கை மறந்து விட்டு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். மறுபுறம் விமர்சகர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி நினைக்காத விராட் கோலி அப்போதும் இப்போதும் ஒரே மாதிரியாக தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தியே பார்முக்கு திரும்பியுள்ளார். எனவே அவரது வழியில் பெரிய ஸ்கோர், விமர்சனங்கள் இதையெல்லாம் மறந்துவிட்டு தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ராகுல் பார்முக்கு திரும்பி விடலாம்.

Advertisement