IND vs WI : இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறப்பட்ட வீரருக்கு மீண்டும் கிடைத்த இடம் – விவரம் இதோ

Saini-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான சுற்றின் முதலாவதாக நடைபெற இருக்கும் இந்த தொடரினை இந்திய அணி வெற்றியுடன் துவங்க வேண்டும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.

IND

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா தலைமையின் கீழ் 16 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.

அதன்படி இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

Saini

கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நவ்தீப் சைனி இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி விளையாடியுள்ள நவ்தீப் சைனி கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து தற்காலிகமாக வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் வந்த வேளையில் அண்மையில் வெளியான ஒரு தகவலின் படி : இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வெளிநாட்டிற்கு சென்று அங்கு குடியேறி விளையாடலாம் என்று நவ்திப் சைனி முடிவெடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பைய குப்பைல போடுங்க, சர்ப்ராஸுடன் தரமான தமிழக வீரருக்கு டாட்டா காட்டிய – தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க ஏகப்பட்ட வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் இனியும் இங்கு காத்திருக்க முடியாது என்று நவ்தீப் சைனி இந்த முடிவெடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பினை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement