ரஞ்சி கோப்பைய குப்பைல போடுங்க, சர்ப்ராஸுடன் தரமான தமிழக வீரருக்கு டாட்டா காட்டிய – தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

Sarfaraz-Khan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஜூலை மாதம் துவங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் 2023 ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்திக்க காரணமாக இருந்த முக்கிய வீரர்கள் கழற்றி விடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுமாராக செயல்பட்ட புஜாரா அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படாதது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ஒரு தரப்பு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல அஜிங்க்ய ரகானே துணை கேப்டனாக வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட நிலையில் இளம் ரத்தத்தை பாய்ச்சுவதற்காக யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த இருவருடைய தேர்வுமே நியாயமானதா என்று பார்த்தால் நிச்சயமாக கிடையாது என்று சொல்ல வேண்டும்.

- Advertisement -

குப்பைல போடுங்க:
முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியாவின் பழமை வாய்ந்த உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பையில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை மையப்படுத்தியே அணியை தேர்வு செய்ய வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்து வரும் எழுதப்படாத விதிமுறையாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 2022 – 23 ரஞ்சி கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 315 ரன்களை 45 என்ற சராசரியிலும் 4 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கைக்வாட் 364 ரன்களை 52 என்ற சராசரிகளும் எடுத்துள்ளனர்.

குறிப்பாக ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் ருதுராஜ் 28 போட்டிகளில் 1941 ரன்களை 42.19 என்ற சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். அவரை விட சற்று சிறப்பாக ஜெய்ஸ்வால் 15 போட்டிகளில் 1845 ரன்களை 80.31 ரன்களை எடுத்துள்ளார். மறுபுறம் 2022 – 23 ரஞ்சி கோப்பையில் 6 போட்டிகளில் 556 ரன்களை 92.66 என்ற சிறப்பான சராசரியில் எடுத்த சர்பராஸ் கான் ஒட்டுமொத்தமாக 27 போட்டிகளில் 3505 ரன்களை 79.65 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து கடந்த 3 – 4 வருடங்களாகவே தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் வெறித்தனமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அசத்துவதால் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சற்று சுமாராக செயல்பட்ட சர்பராஸ் கான் உள்ளூர் தொடரில் முரட்டுத்தனமாக செயல்பட்டும் ஒருமுறை கூட பெஞ்சில் அமரும் வாய்ப்பை பெறவில்லை. அந்த வகையில் சமீப காலங்களாகவே இந்திய அணியின் தேர்வு ஐபிஎல் தொடரை அதை மையப்படுத்தி நடைபெறுவதாக ரசிகர்கள் விமர்சித்தது மீண்டும் ஒருமுறை ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனால் ரஞ்சிக்கோப்பையை குப்பையில் தூக்கி போடுங்கள் என்று நிறைய ரசிகர்கள் தேர்வு குழுவை விளாசுகின்றனர்.

அதை விட இந்த 3 வீரர்களாவது கடந்த 3 – 5 வருடங்களில் தான் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பாபா இந்திரஜித் கடந்த 2013இல் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்துக்காக அறிமுகமாகி இதுவரை 66 போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 4511 ரன்களை 51.85 என்ற சிறப்பான சராசரியில் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடும் கனவுடன் போராடி வருகிறார்.

- Advertisement -

இதில் ருதுராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் உத்தேச பட்டியலில் வந்து தேர்வாகி விட்ட நிலையில் சர்ஃபராஸ் கானாவது குறைந்தபட்சம் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்று வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்த காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை பாபா இந்திரஜித் இதுவரை இந்திய அணிக்காக தேர்வாகும் உத்தேச பட்டியலிலும் மாநில வாரியத்தால் பரிந்துரைக்கப்படவில்லை.

இதையும் படிங்க:டெஸ்ட் சாம்பியஷிப் பைனலில் கலக்கிய ரஹானேவிற்கு இந்திய அணியில் கிடைத்த பதவி உயர்வு – விவரம் இதோ

அதே போல எந்த முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவும் கொடுப்பதில்லை. அதனால் இப்படி ஒரு வீரர்கள் இருக்கிறார் என்று பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாமலேயே பாபா இந்திரஜித் யாரையும் குறை சொல்லாமல் தொடர்ந்து விளையாடுவது தமிழக ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்துள்ளது.

Advertisement