டெஸ்ட் சாம்பியஷிப் பைனலில் கலக்கிய ரஹானேவிற்கு இந்திய அணியில் கிடைத்த பதவி உயர்வு – விவரம் இதோ

Rahane
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது இந்திய அணி ஒரு மாத காலம் ஓய்வில் உள்ளது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Rahane 1

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக தொடர்கிறார்.

அதோடு இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்க்யா ரஹானே விற்கு இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Rahane

கடந்த ஆண்டு மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் உள்ளூர் தொடரில் அசத்தலாக செயல்பட்டதோடு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கூடுதலாக அவருக்கு இந்த துணை கேப்டன் பதவி உயர்வும் கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியில் முடிவுக்கு வந்த 2 வீரர்களின் கரியர். இனிமே வாய்ப்பே கிடையாது – பி.சி.சி.ஐ அறிவிப்பை கவனிச்சீங்களா?

இந்திய அணியின் அனுபவ வீரரான ரஹானே தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருப்பதாலும் ரோகித் சர்மாவிற்கு அடுத்து அவரே சில காலம் டெஸ்ட் கேப்டன்சி செய்வார் என்று அனைவரும் கூறிவந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளது. 35 வயதான ரகானே இந்திய அணிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5066 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement