ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரர் 2 ஆவது டெஸ்டில் இருந்து விலகல் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுதினம் டாக்காவில் நடைபெற உள்ளது.

Shubman Gill

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரின் போது இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட கட்டை விரல் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறினார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று சில தகவல்கள் அண்மையில் வெளியாகியது.

இவ்வேளையில் ரோகித் சர்மாவின் காயம் முழுவதுமாக குணமடையாத காரணத்தினால் அவர் இரண்டாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ரோகித்தை தொடர்ந்து மேலும் ஒரு வீரர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரவபூர்வமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Saini 1

அந்த வகையில் இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக நவ்தீப் சைனி இரண்டாவது போட்டிக்கான அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்புகிறார். ஏற்கனவே முதல் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட வேளையில் அடுத்த இரண்டாவது போட்டியிலும் அவர்கள் இருவரே வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 ஏலம் : என்கிட்ட இன்னும் திறமை இருக்கு, யாராச்சும் வாங்குங்க – சீனியர் இந்திய வீரர் கோரிக்கை

அதேபோன்று கடந்த போட்டியில் விளையாடிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடிப்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement