ஐபிஎல் 2022 ஏலம் : என்கிட்ட இன்னும் திறமை இருக்கு, யாராச்சும் வாங்குங்க – சீனியர் இந்திய வீரர் கோரிக்கை

Mishra
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 405 வீரர்கள் களமிறங்குகிறார்கள். இருப்பினும் இது மினி ஏலம் என்பதால் பெரும்பாலான வீரர்கள் ஏலம் போக மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் துடித்துடிப்பான இளம் வீரர்கள் மட்டுமே பெரிய தொகைகளுக்கு விலை போவார்கள் என்றும் நம்பப்படுகிறது. பொதுவாகவே ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் அனுபவத்தை விட அதிரடியாக செயல்படக்கூடிய இளம் வீரர்களுக்குத் தான் மதிப்பு அதிகமாகும்.

Mishra

- Advertisement -

இருப்பினும் கிறிஸ் கெயில், ப்ராவோ போன்ற சிலர் மட்டுமே வயதை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடினார்கள். அவர்களும் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்று விட்ட நிலையில் டெல்லியை சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ராவும் அவர்களைப் போல தரமான வீரர்களில் ஒருவராக டி20 கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியவர். இந்தியாவுக்காக 2003 – 2017 வரை 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி, டெக்கான் சார்ஜஸ், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக 2021 வரை விளையாடினார்.

சோடை போகல:
அதில் 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகளை 7.35 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் தனது மாயாஜால சுழலால் ஐபிஎல் வரலாற்றில் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ஒரே பந்து வீச்சாளராகவும் சரித்திர சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வயதின் காரணமாக சமீப காலங்களாகவே சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவரை 2022 சீசனில் எந்த அணியும் வாங்கவில்லை. தற்போது 40 வயதாகும் அவரை இம்முறையும் எந்த அணியும் வாங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mishra

இந்நிலையில் இன்னும் 2 – 3 வருடங்கள் அசத்தும் அளவுக்கு தன்னிடம் திறமை இருப்பதால் இந்த ஏலத்தில் ஏதேனும் அணிகள் தம்மை வாங்கும் என்று அமித் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னிடம் இன்னும் 2 – 3 வருடங்கள் சிறப்பான கிரிக்கெட் எஞ்சியுள்ளது. நான் எனக்கு நானே ஃபிட்டாக இருப்பதுடன் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் எனது செயல்பாடுகள் மோசமாக இல்லை. எனவே இம்முறை ஏதேனும் ஒரு ஐபிஎல் அணி என்னை வாங்கும் என்று நான் நம்புகிறேன். ஆரம்ப காலங்களில் லெக் ஸ்பின் என்பது டி20 கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அனைவரும் நினைத்தார்கள்”

- Advertisement -

“ஆனால் லெக் ஸ்பின்னர்கள் அதை தவறு என்பதை நிரூபித்துள்ளார்கள். அது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு நிகராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக ஐபிஎல் தொடரை பாருங்கள். அதில் நானும் சாஹலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய லெக் ஸ்பின்னர்களாக உள்ளோம். எனவே லெக் ஸ்பின்னர்களுக்கு ஏன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்கக்கூடாது”

Amit Mishra

“இந்தியாவிடம் எப்போதுமே ஸ்பின்னர்கள் நிறைந்துள்ளார்கள். உள்ளூர் அளவில் நம்மிடம் நிறைய தரமான சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை என்றாலும் நமது உள்ளூர் கிரிக்கெட்டில் அரை டஜனுக்கு மேல் இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு தரமான லெக் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: எங்களுக்கு எல்லாருமே ஒன்னு தான், ஆஸ்திரேலியா உட்பட இந்த வருடம் ஐசிசி தண்டனை வழங்கிய நாடுகளின் பட்டியல் இதோ

இருப்பினும் இளம் வீரர்களை விரும்பும் ஐபிஎல் அணிகள் தரமானவராக இருந்தாலும் சமீப காலங்களில் சுமாரான பார்மில் இருப்பதுடன் 40 வயது கடந்த இவரை வாங்குவதற்கு யோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தமது அனுபவத்தை மதித்து ஏதேனும் ஒரு அணி குறைந்த விலைக்கு வாங்கும் என்று அமித் மிஸ்ரா உறுதியான நம்பிகையுடன் காத்திருக்கிறார்.

Advertisement