உலகக்கோப்பையில் இடம் கிடைக்குதோ, இல்லையோ, என் குறிக்கோள் இதுமட்டும் தான் – நடராஜன் வெளிப்படை

Nattu
- Advertisement -

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். அதன்படி 2020-ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நடராஜன் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி விளையாடி இருந்தார்.

இந்திய அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து வெளியேறியதற்கு பிறகு அதன்பின்னர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு புதிய உணவுக் கடையை திறந்து வைத்த நடராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்திய அணியில் தனது வாய்ப்பு குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் : எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடினால் உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் நான் என்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாட விரும்புகிறேன். மீதியை கடவுள் பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அதுல ரொம்ப குழம்பிருக்கும் இந்தியாவை ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் ஈஸியா தோற்கடிக்கும் – டேனிஷ் கனேரியா ஓப்பன்டாக்

அதுமட்டும் இன்றி தொடர்ந்து பேசிய அவர் : தற்போது உள்ள இளைஞர்கள் நல்லவிதமாக விளையாடி வருகிறார்கள். சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும். தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கூட ஏகப்பட்ட இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என நடராஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement