சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்த நட்டு. அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா? – குவியும் வாழ்த்துக்கள்

Nattu
- Advertisement -

தமிழ்நாட்டைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தனது திறமையை மெருகேற்றி கொண்ட நடராஜன் இன்று இந்திய அணிக்காக விளையாடும் வரை உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் டி.என்.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவிற்கு உயர்ந்த அவர் ஐபிஎல் தொடரிலும் தனது யார்க்கர் மூலம் தடத்தைப் பதித்து கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்தார்.

அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ச்சியான தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக இடம் பிடித்தார். அப்படி ஆஸ்திரேலியா பயணித்த நடராஜனுக்கு அங்கு வீரர்கள் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது. தனது கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய நட்டு அந்த தொடரிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதனால் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயம் காரணமாக சில வாய்ப்புகளை தவறவிட்டார்.

- Advertisement -

இந்திய அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் தற்போது காயம் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இருப்பினும் விரைவில் இவர் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் அவர் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடராஜன் அவரது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டி தற்போது ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வருவதாக ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நான் எனது சொந்த கிராமத்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ஸ்பெஷலான விடயம் யாதெனில் : அந்த மைதானத்தை சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக அமைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு அந்த மைதானத்திற்கு “நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட்” என்றும் பெயரிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவரு ஒன்னு சொல்றாரு. இவரு ஒன்னு சொல்றாரு. கங்குலி கோலி இடையே என்ன நடக்குது – ரசிகர்கள் குழப்பம்

மேலும் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணிக்காக அறிமுகமான நான் இந்த டிசம்பரில் சொந்தமாக மைதானத்தை அமைத்து வருகிறேன் கடவுளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் அகாடெமி மூலம் சில வீரர்களை பயிற்றுவித்து வரும் வேளையில் தற்போது சொந்தமாக மைதானத்தை உருவாக்கி அங்கும் பல வீரர்களை உருவாக்க இருக்கிறார். அவரது இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement