அவரு ஒன்னு சொல்றாரு. இவரு ஒன்னு சொல்றாரு. கங்குலி கோலி இடையே என்ன நடக்குது – ரசிகர்கள் குழப்பம்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகையான வடிவத்திற்கும் கேப்டனாக செயல்பட்டவர் விராட் கோலி. அவரது தலைமையின் கீழ் சிறப்பாகவே செயல்பட்டு வந்தாலும் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாத சூழலில் விராட் கோலியின் கேப்டன்சி மீது சலசலப்புகள் எழுந்தன. அப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையை முடிந்ததும் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்து இருந்தார். மேலும் பணிச்சுமை காரணமாக இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டன் பதவி வகிக்க போவதாகவும் அறிவித்து இருந்தார்.

Kohli

- Advertisement -

ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மாவை அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இப்படி திடீரென ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை விராட் கோலியிடம் இருந்து பறித்தது கோலிக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்தது. மேலும் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டதற்கு காரணமாக பிசிசிஐ தரப்பில் வெளியான செய்தியின் படி :

ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு ஒரே ஒரு கேப்டன் தான் இருக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்பியதாகவும், மேலும் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை விலக வேண்டாம் எனவும் கங்குலி வலியுறுத்தியதாக அவரே தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விராட் கோலி தனது கேப்டன் பதவி நீக்கம் குறித்து கூறுகையில் :

Ganguly 1

தன்னை யாரும் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தான் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு டெஸ்ட் அணியை அறிவிக்கும் முன்னர் தான் தெரியவந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி கங்குலியும் கோலியும் இந்த கேப்டன் நீக்கம் விவகாரம் குறித்து மாற்றி மாற்றி பேசி வருவதால் அவர்களுக்கு இடையே மோதல் உள்ளதா ? அல்லது இந்திய அணி விராத் கோலியை முற்றிலும் நீக்க முயற்சிக்கிறதா ? என்ற அடிப்படையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னது நான் ரிட்டயர்டு ஆகப்போறேனா? ஒரே போட்டோவ போட்டு எல்லோரையும் காலி பண்ணிய – ரவீந்திர ஜடேஜா

இதன் காரணமாக ரசிகர்களும் தற்போது பெரிதளவு குழப்பமடைந்துள்ளனர். எது எப்படி இருப்பினும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறியுள்ள இவ்வேளையில் மீண்டும் தனது அற்புதமான பேட்டிங் பார்மை வெளிக்கொண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement