பயிற்சியின் போது ஸ்டம்பை தெறிக்க விட்ட யார்க்கர் கிங் நடராஜன்

Nattu
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இரண்டாயிரத்தி2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரானது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே கூறலாம். ஏனெனில் ஆரம்ப காலத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாட தேர்வான நடராஜன் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்த சீசன் முழுவதும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் உலகின் பல்வேறு முன்னணி பேட்ஸ்மேன்களை தனது துல்லியமான யார்கரின் மூலம் அசர வைத்து விக்கெட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

அப்படி அந்த தொடரில் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி, 2 ஒருநாள் போட்டி மற்றும் 4 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் 24 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இப்படி 2020 ஆம் ஆண்டு அவருக்கு அற்புதமான ஆண்டாக அமைய கடந்த 2021 ஆம் ஆண்டு சற்று மோசமான ஆண்டாக அமைந்தது. ஏனெனில் ஐபிஎல் தொடர் துவங்கியதும் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட உள்ள அவர் தற்போது காயத்தில் இருந்து மீண்டு மும்முரமான வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி இந்த வலைப் பயிற்சியின்போது தற்போது நடராஜன் அதிவேகமாக வீசிய ஒரு பந்து துல்லியமாக ஸ்டம்பில் அடித்து அந்த ஸ்டம்ப் உடைகிறது. இந்த வீடியோவை மியூசிக் உடன் சேர்த்து சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கேப்டனா இருந்தாலும் நிறைய கத்துக்கனும்னு நினைக்குறாரு – இளம் கேப்டனை புகழ்ந்த சங்கக்காரா

அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடராஜனின் திறமையைப் பற்றி அறிந்த பல ரசிகர்கள் அவர் இம்முறையும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும் நிச்சயம் அவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement