இந்தியாவுடன் ஃபைனலில் மோதி ஜெயிக்கப்போவது அவங்க தான்.. நேதன் லயன் கணிப்பு

Nathan Lyon
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் எதிரணிகளை துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறுவதை உறுதி செய்துள்ளது.

அதே போல 7 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் விளையாடும் பாகிஸ்தான் பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ தவற விட்டுள்ளது. மறுபுறம் பெரிய அணிகளில் சொந்த மண்ணில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிகராக அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை அடித்து ஏறக்குறைய செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

- Advertisement -

லயனின் கணிப்பு:
அதில் நியூசிலாந்து கேன் வில்லியம்சன் இல்லாமலேயே இருக்கும் வீரர்களை வைத்து அசத்தும் நிலையில் தென்னாப்பிரிக்கா அசால்டாக 400 ரன்களை அடிப்பதில் கில்லாடியாக எதிரணிகளை பந்தாடி வருகிறது. அதை விட ஆரம்பகட்ட தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ஆஸ்திரேலியா தற்போது அடுத்தடுத்த வெற்றிகளுடன் செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

இந்த அனைத்து அணிகளை விட இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அத்துடன் ரோஹித் முதல் பும்ரா வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் அபாரமாக செயல்படுவதால் 2011 போல நிச்சயம் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனலில் முதல் அணியாக விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் நேதன் நிலையில் அதற்கு சவாலாக ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா இருக்கும் என்று கணித்துள்ளார். இது பற்றி அவர் சென் ரேடியோவில் பேசியது பின்வருமாறு. “உண்மையாக இந்த முறை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் ஃபைனலில் மோதும் என்று நான் நம்புகிறேன். அதில் கோப்பையை வெல்ல இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்கும் என்பதால் அப்போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும்”

இதையும் படிங்க: இங்கிலாந்து போட்டியில் டக் அவுட்டானாலும்.. சச்சினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த விராட் கோலி

“அதே சமயம் வேன் டெர் டுசன், ஐடன் மார்க்ரம், க்ளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் அடங்கிய பவரான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள தென்னாப்பிரிக்காவும் மிகுந்த ஆபத்தான அணியாக இருக்கிறது. மறுபுறம் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மொத்த இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது. அதனால் அழுத்தத்தை கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக ஃபைனலில் ஆஸ்திரேலியா பெரிய ரன்கள் அடித்து கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement