- Advertisement -
இந்திய கிரிக்கெட்

800 விக்கெட்ஸ்.. இது தான் இந்தியாவின் தரம்.. அதுக்காக ஈஸியா விடமாட்டோம்.. லயன் பாராட்டுடன் சவால்

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

எனவே இரண்டாவது போட்டியிலும் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது. மறுபுறம் சமீபத்தில் நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியா முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

- Advertisement -

திறமையான இந்தியா:

இந்நிலையில் முதல் போட்டியில் 800க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் – ஜடேஜாவை பெஞ்சில் அமர வைத்து வெற்றி பெறும் அளவுக்கு இந்தியா தரமான அணி என்று ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் பாராட்டியுள்ளார். மேலும் பும்ரா மட்டுமின்றி அனைத்து இந்திய வீரர்களுமே திறமையானவர்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார். அதற்கு நிகரான தரத்தை கொண்ட தாங்களும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்து வெல்வோம் என்று அவர் சவாலும் பெற்றுள்ளார்.

இது பற்றி நேதன் லயன் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி சூப்பர் ஸ்டார்கள் நிறைந்தது. ஆனால் கிரிக்கெட்டில் நீங்கள் வெல்வதற்கு அணியில் உள்ள அனைவரும் அசத்துவது அவசியம். பும்ரா போன்ற வீரர்களால் இந்தியா நட்சத்திர அணியாகவும் இருக்கிறது. அதே சமயம் அவர்களின் மற்ற வீரர்களும் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்”

- Advertisement -

800 விக்கெட்ஸ்:

“அந்த வகையில் இந்திய அணி திறமையானவர்கள். அதனால் பும்ரா போன்ற குறிப்பிட்ட வீரர்கள் மீது மட்டும் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. இரண்டாவது போட்டியில் களமிறங்கும் ஒவ்வொரு இந்திய அணி வீரர்கள் மீதும் நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். அதற்காக நாங்கள் போட்டியை கொடுக்க மாட்டோம் என்று அர்த்தமல்ல. உலகின் சிறந்த இந்திய அணிக்கு எதிராக மிகவும் கடினமான கிரிக்கெட்டை விளையாடி வெல்ல நாங்களும் உறுதியுடன் உள்ளோம்”

இதையும் படிங்க: நல்லா செஞ்சுட்டீங்க.. 3 – 0 வென்றும் ஐசிசி தண்டனையால் நொறுங்கிய நியூஸிலாந்து கனவு.. இந்தியாவுக்கு சாதகம்

“இந்திய அணியில் 530 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் 300 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா உள்ளார்கள். ஆனால் அவர்கள் பெஞ்சில் இருக்கும் அளவுக்கு இந்திய அணி தரம் மிகுந்தது. அது எனக்கு ஆச்சரியமாகவும் அமைந்தது. ஆனால் அதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் எந்த வீரர்களை கொண்டு வந்தாலும் நாங்கள் போட்டியிட்டு வெல்ல தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -