நல்லா செஞ்சுட்டீங்க.. 3 – 0 வென்றும் ஐசிசி தண்டனையால் நொறுங்கிய நியூஸிலாந்து கனவு.. இந்தியாவுக்கு சாதகம்

ben stokes
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து நல்ல முன்னேற்றத்தை சந்தித்தது.

இந்நிலையில் அந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தலா 3 ஓவர்களை 2 அணிகளும் வீசவில்லை என்று ஐசிசி கூறியுள்ளது. அதனால் அந்த 2 அணிகளுக்கும் போட்டியின் சம்பளத்திலிருந்து தலா 15% சம்பளம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

நியூஸிலாந்து ஏமாற்றம்:

அது போக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே நியூஸிலாந்து, இங்கிலாந்து பெற்றிருந்த புள்ளிகளில் தலா 3 புள்ளிகளை கழித்து ஐசிசி மற்றுமொரு தண்டனை வழங்கியுள்ளது. அது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்தில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து தோற்கடித்திருந்தது.

அதன் வாயிலாக இந்திய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று நியூசிலாந்து வரலாறு படைத்திருந்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 55.36% புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால் தற்போது 3 புள்ளிகள் கழிக்கப்பட்டதால் 47.92% புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள நியூசிலாந்து 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு வாய்ப்பு:

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் 55.36% புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அப்படி பெற்றாலும் அந்த அணி ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு 90% வாய்ப்பில்லை. அதன் காரணமாக 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியும் ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பை நியூசிலாந்து கிட்டத்தட்ட இழந்துள்ளது. மறுபுறம் 61.11% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு போட்டியாக தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளன.

இதையும் படிங்க: முதல்ல அதை ஆஃப் பண்ணுங்க.. பிரித்திவி ஷா கம்பேக் அக்கறையுடன் பீட்டர்சன் சொன்ன அறிவுறை

அதனால் ஆஸ்திரேலியாவில் 4 – 1 என்பதற்கு பதிலாக தற்போது 3 – 1 என்ற கணக்கில் வென்றால் கூட இந்தியா ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கிடையே “அந்தப் போட்டி 10 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிந்தும் இந்த தண்டனை நன்றாக இருக்கிறது ஐசிசி” என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தம்முடைய இன்ஸ்டாகிராமில் அதிருத்தியுடன் விமர்சித்துள்ளார்.

Advertisement