IND vs AUS : இந்தியாவை சுருட்டிய ஆஸ்திரேலியா, ஜாம்பவான் ஷேன் வார்னேவை மிஞ்சிய நேதன் லயன் – புதிய வரலாற்று சாதனை

Nathan-Lyon-and-Shane-Warne
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணி என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படாமல் படுமோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ள நிலையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சை பயன்படுத்தி கச்சிதமாக பந்து வீசிய மேத்தியூ குனேமான் ரோகித் சர்மா 12, சுப்மன் கில் 21 (18) என தொடக்க வீரர்களை ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் காலி செய்தார்.. அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவை தன்னுடைய மாயாஜால சுழலால் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நேதன் லயன் 1 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கி அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவையும் 4 ரன்களில் காலி செய்தார்.

புதிய சாதனை:
போதாக்குறைக்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி ஏமாற்றியயதால் 45/5 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை காப்பாற்ற முயன்ற விராட் கோலி ஓரளவுக்கு போராடி 22 ரன்களில் டோட் முர்பியிடம் ஆட்டமிழந்தார். அவருடன் நங்கூரமாக விளையாட முயன்ற கேஎஸ் பரத்தை 17 ரன்களில் நேதன் லயன் காலி செய்ததால் மேலும் தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற அக்சர் படேல் 12* (33) ரன்கள் எடுத்துப் போராடினாலும் எதிர்ப்புறம் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 (12), உமேஷ் யாதவ் 17 (13), சிராஜ் 0 (4) என லோயர் ஆர்டர் வீரர்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் இந்தியாவை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்களையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Nathan Lyon and Shane Warne 1

அதனால் இந்திய ரசிகர்களை கலக்கமடைய வைக்கும் அளவுக்கு அசத்தலாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் 3 விக்கெட்டுகளை சாய்த்த நேதன் லயன் மீண்டும் தன்னை சிறந்த ஸ்பின்னர் என்பதை நிரூபித்துள்ளார். குறிப்பாக இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய கண்டத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வெளிநாட்டு பவுலர் என்ற ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பொதுவாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அங்குள்ள கால சூழ்நிலைகளை சமாளித்து விளையாட முடியாமல் தடுமாறுவது வழக்கமாகும். அதே போலவே வேகம், ஸ்விங் ஆகியவற்றுக்கு உகந்த கால சூழ்நிலைகளில் விளையாடப் பழகிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சுழலுக்கு சாதகமான இந்திய துணை கண்டத்தில் இருக்கும் நாடுகளில் சிறப்பாக செயல்படுவது மிகவும் சவாலாகும். இருப்பினும் தனது அனுபவம் மற்றும் திறமையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைக் கொண்ட ஆசிய கண்டத்தில் அதிக விக்கெடுகளை எடுத்த வெளிநாட்டு பந்து வீச்சாளராக நேதன் லயன் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:

lyon 1

இதையும் படிங்க:IND vs AUS : கே.எல் ராகுல் பத்தி எதுவுமே பேசாமல் நகர்ந்து சென்ற ரோஹித் சர்மா – டாஸிற்கு பிறகு பேசியது என்ன?

- Advertisement -

1. நேதன் லயன் (ஆஸ்திரேலியா) : 128* விக்கெட்கள்

2. ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) : 127 விக்கெட்கள்

- Advertisement -

3. டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) : 98 விக்கெட்கள்

4. டேல் ஸ்டைன் (தென் ஆப்பிரிக்கா) : 92 விக்கெட்கள்

5. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து): 82 விக்கெட்கள்

6. கோர்ட்னி வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) : 77 விக்கெட்கள்

Advertisement