- Advertisement -
இந்திய கிரிக்கெட்

குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட க்ருனால் பாண்டியா – நட்டாஷா கொடுத்த செம ரிப்ளை

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் படுதோல்வி அடைந்து கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியது. ஒருபுறம் மும்பை அணி தோல்வியை சந்தித்தது ஹார்டிக் பாண்டியாவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் மற்றொருபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் பாண்டியாவிற்கு போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தற்போது மன அழுத்தத்திற்கு பாண்டியா ஆளாகியுள்ளார்.

ஏனெனில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்த வருத்தத்தில் இருக்கும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

மேலும் ஏற்கனவே நடாஷா சமூக வலைதளங்களில் இருந்து பாண்டியாவுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கிய வேளையில் ஐபிஎல் தொடரின் போதும் மைதானத்திற்கு வந்து மும்பை அணிக்காகவும், அவருக்காகவும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதேபோன்று விரைவில் அவர் விவாகரத்து பெறுவார் என்றும் கூறப்படும் வேளையில் இதுகுறித்து இருவரது தரப்பிலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி அமெரிக்கா பயணித்து விட்டது.

- Advertisement -

ஆனால் துணைக்கேப்டனான ஹார்டிக் பாண்டியா மட்டும் மன அமைதிக்காக தற்போது வெளிநாட்டில் உள்ளார் என்றும் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தில் மகன் கவிர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியான இடம் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நானா இருந்தா ஜெய்ஸ்வாலுக்கு பதில்.. அந்த வருங்கால கேப்டன் வீரரை செலக்ட் பண்ணிருப்பேன்.. மோர்கன் ஓப்பன்டாக்

அவரது இந்த பதிவை கண்ட நட்டாஷா புன்னகையுடன் இருக்கக்கூடிய ஹார்ட்டின் எமோஜியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் மகன் மீது அவர் வைத்துள்ள பாசம் உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் பாண்டியா மற்றும் நட்டாஷா ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -