நானா இருந்தா ஜெய்ஸ்வாலுக்கு பதில்.. அந்த வருங்கால கேப்டன் வீரரை செலக்ட் பண்ணிருப்பேன்.. மோர்கன் ஓப்பன்டாக்

Eoin Morgan
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு பயிற்சி எடுக்கும் இந்திய அணியினர் ஜூன் 6ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

மற்றபடி விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ஜடேஜா, ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் தாமாக இருந்தால் இந்திய அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மோர்கன் தேர்வு:
ஏனெனில் ஜெய்ஸ்வாலை விட சுப்மன் கில் வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படக்கூடிய திறமையைக் கொண்டுள்ளதாக மோர்கன் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு இப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்ப்பது நல்ல முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நான் அணியை தேர்வு செய்திருந்தால் யசஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்திருப்பேன்”

“அது மட்டுமே நான் எடுக்கக்கூடிய ஒரே வித்தியாசமான முடிவாக இருந்திருக்கும். அவருடன் நான் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளேன். எனவே அவர் எப்படி சிந்தித்து வேலை செய்வார் என்பது எனக்குத் தெரியும். அவர் இந்திய அணிக்குள் ஒரு வருங்கால கேப்டனாக இருப்பார் என்று நான் உணர்கிறேன். எனவே உலகக்கோப்பை போன்ற பெரிய தருணங்களில் விளையாடும் போது தான் சிறந்த கேப்டன்கள் உருவெடுப்பார்கள் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஒருவேளை ஓரமாக அமர்ந்திருந்தாலும் இங்கிருந்து அவருக்கு ஒரு நேர்மறையான உத்வேகம் கிடைக்கும்” என்று கூறினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி வருகிறார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்கவில்லை. மறுபுறம் ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கக் கூடிய துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: எல்லாமே சாதிச்ச என்னோட நிறைவேறாத ஆசை அது தான்.. அந்த சம்பவத்துல இருந்துருக்கனும்.. அப்ரிடி வருத்தம்

மேலும் சுப்மன் கில் வலது கை பேட்ஸ்மேன் என்பதால் ரோகித் சர்மாவுடன் இடதுகை பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் களமிறங்குவது நல்ல தேர்வாக இருக்கும். அதனாலயே ஜெய்ஸ்வால் முதன்மை அணியில் துவக்க வீரராக தேர்வாகியுள்ளார். அதே சமயம் இப்போதும் சுப்மன் கில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement