என் கனவில் கூட விராட் கோலி இப்படி பண்ணுவார்னு நான் நெனச்சி பாக்கல – மனதார பாராட்டிய நாசர் ஹுசேன்

Nasser-Hussain
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது நவம்பர் 15-ஆம் தேதியான இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணி முதலாவதாக பேட்டிங் செய்யும் அன்று அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 113 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 117 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் 50 சதங்களுடன் முதலிடத்தினை பிடித்தார். அதுமட்டுமின்றி இந்த உலகக்கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே தற்போது வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள அவர் மூன்றாவது சதத்தினை அடித்து இந்திய அணியின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்து வரும் விராட் கோலி தற்போது அவரின் இந்த அதிக ஒருநாள் சாதனையையும் முறியடித்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலியை மனதார பாராட்டி இருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசேனும் வெளிப்படையாக அவரை பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ஒரு பதிவில் : சச்சின் டெண்டுல்கர் அவருடைய சாதனைகளை எல்லாம் யாராலும் முறியடிக்க முடியாது என்றே நான் நினைத்தேன். ஆனால் அதனை என் வாழ்நாளிலேயே பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. அந்த சாதனைகளை தற்போது ஒவ்வொன்றாக விராட் கோலி முறியடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக விராட் கோலி படைத்த இந்த 50 சத சாதனையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க : இதான் சரியான நேரம்.. 2023 உ.கோ முடிவால் முக்கிய முடிவை எடுத்த பாபர் அசாம்.. பாக் ரசிகர்கள் சோகம்

அந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று நாசர் உசேன் பாராட்டியுள்ளார். வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த அரையிறுதி போட்டியில் ஏகப்பட்ட பிரபலங்கள் நேரடியாக கண்டு வரும் வேளையில் சச்சினின் சொந்த மைதானத்தில் வைத்து விராட் கோலி முறியடித்தது அவரது சாதனையை முறியடித்தது அனைவரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement